Published : 05 Dec 2023 05:51 AM
Last Updated : 05 Dec 2023 05:51 AM

‘அனிமல்’ கல்ட் படமா? - த்ரிஷாவை  விமர்சித்த நெட்டிசன்கள்

சென்னை: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘அனிமல்’. இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது.

கடந்த 1-ம் தேதி வெளியான இந்தப் படம் 3 நாட்களில் ரூ. 200 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்த நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அனிமல் கல்ட் திரைப்படம் என்று கூறி பாராட்டி இருந்தார். ‘அனிமல்’ பெண் வெறுப்பைப் பேசுவதாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மன்சூர் அலிகான் விவகாரத்தில் பெண்களின் கண்ணியம் பற்றி பேசிய த்ரிஷா, 'அனிமல்' படத்தை கல்ட் என்று பாராட்டி இருப்பது வேடிக்கையாக இருப்பதாக ட்ரோல் செய்தனர். இதைத் தொடர்ந்து தனது பதிவை நீக்கியுள்ளார் த்ரிஷா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x