Published : 10 Jul 2023 11:17 AM
Last Updated : 10 Jul 2023 11:17 AM

மொட்டைத் தலையுடன் ஷாருக்: அட்லீயின் ‘ஜவான்’ பிரிவ்யூ எப்படி? 

‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் படத்தின் முன்னோட்டத்தை (Prevue) படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Prevue எப்படி?: அனல் பறக்கும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு நடுவே ராணுவ அதிகாரியாக அறிமுகமாகிறார் ஷாருக்கான். இன்னொரு காட்சியில் ஜேம்ஸ் பாண்ட் வில்லன் போல முகத்தில் முகமூடியுடன் ஒரு காட்சியில் அமர்ந்திருக்கிறார். இன்னொரு கெட்டப்-ல் உடல் முழுக்க கட்டு போல துணியை சுற்றிக் கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து காட்டப்படும் சண்டைக் காட்சிகள் ‘பதான்’ படத்தை நினைவூட்டுகின்றன. இறுதியில தலையில் கட்டுடன் மெட்ரோ ரயிலுக்குள் நுழையும் ஷாருக், கட்டை அவிழ்த்து மொட்டைத் தலையுடன் சர்ப்ரைஸ் கொடுக்கிறார்.

‘ஜவான்’ Prevue வீடியோ:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x