Published : 04 Jul 2023 05:46 PM
Last Updated : 04 Jul 2023 05:46 PM

‘சந்திரமுகி 2’ உடன் மோதும் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ - விநாயகர் சதுர்த்தி ரிலீஸ்

விஷால் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’, ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’, ‘பகீரா’ படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’. படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுனீல், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தை மினி ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.

அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், படம் வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளன்று பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ‘சந்திரமுகி 2’ படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x