Published : 15 Jun 2023 05:44 AM
Last Updated : 15 Jun 2023 05:44 AM

சூப்பர் ஹீரோ கதையில் அடா சர்மா

மும்பை: தமிழில் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியவர், இந்தி நடிகை அடா சர்மா. தொடர்ந்து, ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்துள்ளார். இந்தப் படம் இந்தியாவில், ரூ.238 கோடி வசூலித்துள்ளது.

இந்நிலையில் அடா சர்மா, ஆங்கில படம் ஒன்றில் சூப்பர் ஹீரோ கதையில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, “ஒவ்வொரு கதையிலும் வித்தியாசமான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். ஆக்‌ஷன் கதைகளில் நடிக்க எனக்கு எப்போதும் ஆர்வம் அதிகம். ஏற்கெனவே ‘கமாண்டோ 2’ படத்தில் அப்படி நடித்திருக்கிறேன். இப்போது, பெண் சூப்பர் ஹீரோ கதையில் நடிக்கிறேன். அந்தப் படம் பற்றிய தகவலை இப்போது அறிவிக்க இயலாது. ‘கேரளா ஸ்டோரி’ படத்துக்குப் பிறகு இது வித்தியாசமாக இருக்கும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x