Published : 11 Jun 2023 03:08 PM
Last Updated : 11 Jun 2023 03:08 PM

‘தி கேரளா ஸ்டோரி’ இயக்குநரின் புதிய படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

மும்பை: ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை இயக்கிய சுதிப்டோ சென் இயக்கவுள்ள அடுத்த படத்துக்கு ‘சஹாராஸ்ரீ’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையை கொண்ட இந்தப் படத்துக்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது. தென்னிந்தியாவில் சோபிக்காத இப்படம் இந்தி பேசும் மாநிலங்களில் வரவேற்பை பெற்றது. இதுவரை இப்படம் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து சஹாரா இந்தியா பர்வார் நிறுவனத்தை உருவாக்கிய சுப்ரதா ராயின் பயோபிக் படத்தை சுதிப்டோ சென் இயக்கவுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. இப்படத்துக்கு ‘சஹாராஸ்ரீ’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

லெஜெண்ட் ஸ்டூடியோஸ் மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பாடல் வரிகளை குல்ஸார் எழுதுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x