Published : 06 Jun 2023 09:47 AM
Last Updated : 06 Jun 2023 09:47 AM

தமிழில் மீண்டும் கங்கனா ரனாவத்: மாதவன் ஜோடியாக நடிக்கிறார்

கங்கனா ரனாவத், மாதவன்

இந்தி நடிகை கங்கனா ரனாவத், தமிழில் ஜெயம் ரவியின் ‘தாம் தூம்’ படத்தில் நடித்தார். பிறகு இந்தியில் கவனம் செலுத்திய அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான ‘தலைவி’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். இப்போது பி.வாசு இயக்கத்தில் ‘சந்திரமுகி 2’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ராகவா லாரன்ஸ், ராதிகா, வடிவேலு உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

இதையடுத்து டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விபின் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாக இருக்கிறது. இதில் மாதவன் ஹீரோவாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

மாதவனும் கங்கனாவும் ‘தனு வெட்ஸ் மனு’ என்ற இந்தி படத்தில் ஏற்கெனவே இணைந்து நடித்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x