Published : 07 Jan 2017 05:01 PM
Last Updated : 07 Jan 2017 05:01 PM

சென்னை பட விழா | கேஸினோ | ஜன.8 | படக்குறிப்புகள்

சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.8) கேஸினோவில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 10.00 மணி | GLORY / SLAVA | DIR: KRISTINA GROZEVA | BULGARIA | 2016 | 101'

பல்கேரிய திரைப்படமான இதில் எளிய வாழ்க்கையை வாழும் ரயில்வே ஊழியர் ஒருவர் தணடவாளத்தில் லட்சக்கணக்கான பணம் சிதறிக்கிடப்பதைப் பார்க்கிறார், அதனை முறைப்படி போலீசிடம் ஒப்படைக்கிறார். ஆனால் போக்குவரத்து அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ஜூலியா ஸ்டைகோவா ஊழல் வழக்கு ஒன்றைத் திசைத்திருப்ப இவரை பயன்படுத்தத் திட்டமிடுகிறார். இவரது எளிமையான வாழ்க்கை அரச/ஆட்சி அதிகாரத்தின் கோரப்பிடியில் சிக்குகிறது.

பகல் 12.00 மணி | THE GOLDEN ERA / HUANG JIN SHI DAI | DIR: ANN HUI | HONGKONG | 2014 | 178'

ஒரு மனிதரின் வாழ்க்கைப் பற்றிய உண்மையைத் தெரிந்து எழுதும் வாழ்க்கை வரலாறு எழுத்தாளர் என்று தன்னை சொல்லிக்கொள்வதில்லை. மாறாக, ஒரு பலவகை சித்தரிப்புகளை படைக்கும் திறன்படைத்த கவி, ஸியோ ஹாங். அவர் தனது 31 வயதில் காசநோயினால் தாக்கப்பட்டு 1941ல் இறந்தார். நிலப்பிரபுத்துவ ஆட்சி முடிவுக்கு வந்ததிலிருந்து பசிபிக் போர்வரையுள்ள சீன வரலாற்றின் சமீபத்திய வரலாற்றுக் காலத்தில் மிகவும் கொந்தளிப்பான நேரங்களில் அனுபவம் மிக்கவர். ஹுய் வரையிலான பரந்துவிரிந்து வரலாற்றின்முன் டாங் வெய் ஒரு கவிஞராக ஒரு நுட்பமான அவரது உளவியல் ஓவியத்தை தீட்டுவதோடு தொடர்ந்து கலைஞனின் ஆன்மாவை வளர்த்தெடுக்கிறார். வரலாற்றின் சேதாரத்திலிருந்து தப்பித்து இந்த வரைக்குமாவது பாதுகாப்பாக உயிர்பிழைத்தேனே என்று எழுதிச் செல்லும் ஸியோ ஹாங் அமைதி, சமாதானம் ஆகியவை குறித்து எழுதி முடிக்கிறார்.

பிற்பகல் 2.30 மணி | DOGS / CAINI | DIR: BOGDAN MIRICA | ROMANIA / QATAR | 2016 | 104'

பச்சாரெஸ்ட் பகுதியில் இருந்து உக்ரைன் எல்லைப்பகுதிக்கு வந்துள்ள ரோமன் எனும் இளைஞன் அங்கு தாத்தா தனக்கு வழங்கிய நிலத்தை விற்க வருகிறான். ஆனால் அந்த நிலத்தை விற்க முடியாத சூழல் ஏற்படுகிறது. ஏற்கெனவே தாத்தா ஒரு உள்ளூர் குற்றவாளிகளின் தலைவனாக செயல்பட்டவர். இதனால் பாதிக்கப்பட்டவர் நிலத்தை விற்கவிடாமல் செய்யவே பிரச்சனையை இளைஞன் எப்படி எதிர்கொள்ளத் துணிகிறான். கடைசியில் முக்கோண வன்முறையொன்றில் மூன்றுபேர் பெரும் சண்டையில் சிக்குகிறார்கள்.

மாலை 4.40 மணி | LOOP | HUROK | DIR: ISTI MADARASZ | HUNGARY | 2016 | 95'

ஆடம், கர்ப்பமாகியிருக்கும் தனது காதலியை, ஒரு விபத்தில் இழக்கிறான். ஆனால் அவளது மரணத்துக்குக் காரணமான சம்பவங்களை சரி செய்ய, ஆடமுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் இந்த வாய்ப்பு அவ்வளவு எளிமையானதல்ல. ஆடம் இதற்கு முன் எடுத்த முடிவுகளின் பின் விளைவுகளை கையாண்டு, தனது காதலியின் உயிரையும் காப்பாற்ற வேண்டும்.

மாலை 7.00 மணி | LOAD / LA CARGA | DIR: ALAN JONSSON GAVICA | MEXICO | 2016 | 94'

16-ம் நூற்றாண்டின் பிற்பகுதி. இந்திய ஆண் ஒருவரும், ஸ்பானிய பெண் ஒருவரும் சுதந்திரத்தை நாடி புது உலகத்தைத் தேடி காட்டுக்குள் செல்கின்றனர். தீவிரமான அவர்கள் பயணத் தேடுதல் இருவரின் இறுக்கத்தையும் குறைக்கிறது. அவர்களின் வேறுபாடுகளை மறக்கடிக்கச் செய்கிறது. அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுவே அவர்களின் உயிருக்கு ஆபத்தாக மாறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x