Last Updated : 11 Jan, 2017 06:25 PM

 

Published : 11 Jan 2017 06:25 PM
Last Updated : 11 Jan 2017 06:25 PM

நாம் எடுப்பதும் உலக சினிமா தான்! - மிஷ்கின்





சென்னை சர்வதேச திரைப்பட விழா 'உலக சினிமா' சீசன் என திரைப்பட ஆர்வலர்களால் கருதப்படும் நிலையில், இயக்குநர் மிஷ்கின் பகிர்ந்த கருத்துகள்:



"வெளிநாட்டு தொழில்நுட்பக் கலைஞர்கள்தான் நமக்கு கேமராவை எப்படி இயக்க வேண்டும், சினிமாவுக்கு கதை எப்படி எழுத வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள். அப்படித்தான் நமது திரையுலக வாழ்க்கைத் தொடங்கியது.



கூத்து என்பது நம்மிடையே இருந்தது. சினிமா என்பது வெளியுலகிலிருந்து வந்தது. கூத்து - சினிமா இரண்டுமே ஒன்று என்றாலும், சினிமா என்பது தொழில்நுட்பம் சார்ந்த ஒரு விஷயம். இன்று வரைக்கும் கூட வெளிநாட்டு படங்களை நாம் வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். 'டைட்டானிக்', 'தி செவன்த் சாமுராய்' போன்ற படங்களை இப்போதும் வியந்து ரசிக்கிறோம்.



திரைப்படங்கள் பார்ப்பதை பார்வையாளர்கள் பார்ப்பது மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பார்ப்பது என இரண்டு விதமாக பிரிக்கவேண்டும். பார்வையாளர்கள் மிகவும் உன்னிப்பாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. அப்படத்தின் கதை என்ன என்பதை கவனித்தால் போதும். அழகியல் சார்ந்த விஷயங்களை, அழகியல் சார்ந்திருப்பவர்கள் ரசிப்பார்கள். ஆனால், தொழில்நுட்ப கலைஞர்களோ பார்வையாளனாகவும் பார்க்க வேண்டும், தொழில்நுட்பம் சார்ந்தும் பார்க்க வேண்டும். எப்படி இதைக் காட்சிப்படுத்தினார்கள் என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.



பாலா, நான், வெற்றிமாறன், ராம் என பலர் தமிழில் உலக சினிமாதான் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்தக் காலத்தில் மகேந்திரன், பாலசந்தர் உலக சினிமாதானே எடுத்தார்கள். நம்முடைய சினிமா, உலக சினிமாவை விட தள்ளி இருக்கிறது என்ற ஒரு விஷயமே கிடையாது. ஓர் இந்தியாவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் 'பதேர் பாஞ்சாலி' பாருங்கள் என உலக சினிமா எடுத்த குரோசவா சொல்லியிருக்கிறார். நாமும் உலகின் மிகச் சிறந்த மேன்மையான படைப்புகளைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்" என்றார் மிஷ்கின்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x