Published : 15 Dec 2018 08:23 PM
Last Updated : 15 Dec 2018 08:23 PM

சென்னை பட விழா | தேவி | டிசம்.16 | படக்குறிப்புகள்

காலை 11.00 மணி | WESTERN  | DIR: VALESKA GRISEBACH | GERMANY  | 2017 | 121'

பல்கேரியாவின் தொலைதூரத்தில் கிரேக்க எல்லைப்பகுதி. மலைகள் சூழ ஆற்றில் நீரோடும் அழகிய இடம். அங்கு ஜெர்மனியின் உயர் அழுத்த மின்நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படுகிறது. அதில் சில ஜெர்மானியர்கள் ஒரு குழுவாக தங்கி பணியில் ஈடுபடுகிறார்கள். உயரமான, மீசை வைத்த முரட்டுத்தன தோற்றமுள்ள ஒரு ஆசாமியும் அவர்களது ஜோதியில் கலக்கிறான். மொழி, கலாச்சார வேறுபாடுகளால் தங்களுக்குள் இருந்து வந்த முன்முடிவுகளில் இருந்து முரண்படுகிறார்கள். உள்ளூர் கிராம மக்கள் இருந்து அங்கீகாரம் மற்றும் ஆதரவை பெறுவதற்காக போட்டியிடுகிறார்கள்; உடனடியாக நிலைமை மாறுகிறது. கேன்ஸ் திரைவிழாவில் அன்சர்ட்டெய்ன் பிரிவில் திரையிடப்பட்டது. 15 விருதுகள் 15 பரிந்துரைகள் பெற்றுள்ளன.

படத்தின் ட்ரெய்லர்

பிற்பகல் 2.00 மணி | AT WAR / EN GUERRE | DIR: STEPHANE BRIZE | FRANCE  | 2018 | 113'

பிரான்ஸில் உள்ள ஒரு தொழிற்சாலை நல்ல லாபம் ஈட்டிய நிலையில், அங்கு வேலைசெய்யும் 1,100 தொழிலாளர்களிடம் பணிப்பாதுகாப்பை தொழிற்சாலையின் மேலாளர் அளிக்கிறார். ஆனால், திடீரென தொழிற்சாலை மூடப்படுகிறது. கதையின் நாயகன் லாரன்ட் தொழிற்சாலையின் முடிவை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் போராடும் கதைதான் 'அட் வார்'. போராட்டத்தின் முடிவில் தொழிற்சாலை திறக்கப்பட்டதா என்பதுதான் மீதிக்கதை. கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்தப் படத்திற்கான போட்டியில் பங்கேற்ற திரைப்படம்.

படத்தின் ட்ரெய்லர்

At War

 

மாலை 4.30 மணி | DOGMAN  | DIR: MATTEO GARRONE | ITALY | 2018 | 102'

நாய்கள் மீதான பற்றின் காரணமாக நாய்களுக்கான காப்பகத்தை நடத்துபவரின் கதை இது. தன் மகளின் விடுமுறை நாட்களை அவளது விருப்பப்படி கழிக்க அவருக்கு பணம் தேவைப்படுகிறது. இதனால், தனக்கு தெரிந்த நண்பர்களுக்கு போதைப்பொருள் விற்க ஆரம்பிக்கிறார். அப்போது, வன்முறையில் ஈடுபடும் குத்துச்சண்டை வீரர் ஒருவர், அவரிடம் போதைப்பொருளை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் சென்று விடுகிறார். இதையடுத்து, அந்த குத்துச்சண்டை வீரரால் நாய்களின் காப்பாளர் திருட்டு சம்பவம் ஒன்றிலும் ஈடுபட்டு சிறை செல்கிறார். இதன் தொடர்ச்சியாக, குத்துச்சண்டை வீரரை கொல்லும் அளவுக்கு அவர் செல்கிறார். பல்வேறு திருப்பங்களுடன் இக்கதை நகர்கிறது. 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான கேன்ஸ் விருதை இப்படத்தில் நடித்த மார்சிலோ ஃபோண்டே பெற்றார். 

படத்தின் ட்ரெய்லர்

DOGMAN

 

மாலை 7.00 மணி | YOMEDDINE | DIR: A.B.SHAWKY | EGYPT |  2018 | 97'

“யோமிடைன்” என்பது அரபி மொழியில் தீர்ப்பு வழங்கப்படும் நாள் என்று பொருள். கதையின் நாயகன் பெயர் பேஸ்ஹே. எகிப்து நாட்டில் நடக்கும் கதையாகும். பேஸ்ஹே தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர். சிறுவயதில் இருந்தே தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழும் பகுதியில் பேஸ்ஹே இருந்தவர். தனது மனைவி மறைவுக்குப்பின் அந்த இடத்தில் வாழ பேஸ்ஹேவுக்கு பிடிக்கவில்லை, இழந்த தனது குடும்பத்தினரை சந்திக்கப் புறப்படுகிறார்.ஒரு கழுதை பூட்டப்பட்ட வண்டியில் தன்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு வேறு இடம் நோக்கி முதல்முறையாக புறப்படுகிறார். அப்போது ஒபாமா என்ற ஆதரவற்றச் சிறுவன் பேஸ்ஹேவுடன் சேர்கிறான். இருவருக்கும் இடையே உருவாகும் நட்பும், அதன்பின் பேஸ்ஹே தனது குடும்பத்தினரை தேடிக் கண்டுபிடித்தாரா என்பதுதான் மீதமுள்ள கதையாகும். எகிப்து நாட்டின் பாலைவன, வெயில், பிரமீடுகள், மக்களின் வாழ்க்கை முறை தெளிவாகத் தரப்பட்டுள்ளது. குறிப்பாக தொழுநோயால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவரை உண்மையாக நடிக்க வைத்திருப்பது படத்தின் சிறப்பாகும்.இப்படம் ஆஸ்கர் விருதுக்காக சிறந்த வெளிநாட்டு படப் பிரிவில் போட்டியில் பங்கேற்றது. கேன்ஸ் திரைவிழாவிலும் சிறந்த படத்திற்கான 'பாம் டி ஓர்' விருதுதேர்வு பட்டியலில் இடம்பிடித்தது.

படத்தின் ட்ரெய்லர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x