Published : 19 Dec 2018 03:39 PM
Last Updated : 19 Dec 2018 03:39 PM

சென்னை பட விழா | ரஷிய கலாச்சார மையம்  | டிசம்.20 | படக்குறிப்புகள்

காலை 10.00 மணி | WALKING WITH THE WIND  | DIR: PRAVEEN MORCHHALE  | LADAKHI | 2017 | 79'

இமயமலை அடிவாரத்தில் வசிக்கிறான் 10 வயது செரிங் (Tsering). ஒரு நாள் அவனது நண்பனின் பள்ளிக்கூட நாற்காலியை தவறுதலாக உடைத்துவிடுகிறான். அதனை சரி செய்ய, கழுதையின் மீது நாற்காலியை வைத்து ஏழு கி,மீ கடந்து ஊருக்கு வருகிறான். அவன் வரும் வழியில், அவன் சந்திக்கும் நபர்கள், நடக்கும் சம்பவங்கள், கடக்கும் பேச்சுகள் என விரிகிறது திரைக்கதை. இது ஒரு நாற்காலியை சரிசெய்ய நடக்கும் பயணம் மட்டும் அல்ல, நாட்டு நடப்பை, அந்த நிலப்பரப்பை, நிகழ்கால இந்தியாவின் ஒரு பகுதியை கண்முன் நிறுத்தும் ஒரு முயற்சி. இந்தப் படம், மூன்று தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றது. இந்தியாவின் மறுமுனையைப் பார்க்க விரும்புபவர்கள் தவறவிடக்கூடாத படம்.

படத்தின் ட்ரெய்லர்

பகல் 12.00 மணி | HEBBET RAMAKKA  | DIR: N.R.NANUNDE GOWDA  | KANNADA | 2018 | 144'

பெண்கள் வீட்டு வேலை மட்டுமே பார்க்க வேண்டுமே என்ற அரதப்பழமையான கொள்கைகளுடன், அதுவே தனது விதி என்று வாழ்ந்து வருகிறாள் ராமக்கா. அந்த எண்ணத்தை முறியடிக்கும் விதமாக அவள் வாழ்க்கையில் ஒரு புதிய பாதை உருவாகிறது. தனது கணவனால் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெறுகிறாள். தனது குறைகள், தன் மனதில் தான் வைத்திருக்கும் நெறிமுறைகள் எல்லாவற்றையும் தாண்டி ராமக்கா செயல்பட வேண்டும். அவளைச் சுற்றி ஊழல் அரசியல்வாதிகள், ஆண் ஆதிக்கம் எனப் பல சக்திகள் ஆட்டுவிக்கின்றன. ராமக்காவாக இப்படத்தில் நடிகை தாரா தனது சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். 65வது தேசிய திரைப்பட விருதுகள் 2018ல் சிறந்த கன்னடப் படத்திற்கான விருதை ஹெப்பெட் ராமக்கா பெற்றது.

படத்தின் ட்ரெய்லர்

மாலை 1.30 ------ திரையிடல் இல்லை ------

பிற்பகல் 3.00 மணி |  BLACK GOD, WHITE DEVIL | DIR: GLAUBER ROCHA  | BRAZIL | 1964 | 120'

பிரேசில் நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட சர்டாவோ என்ற ஆண்டில் நடைபெறும் கதை இது. வடகிழக்கு பிரேசிலில் வறண்ட நிலப்பகுதி. மனோயில் என்பவன் அப்பகுதியின் பண்ணைநிலத்தில், வேலை பார்க்கிறான். ஒருநாள் பணப்பிரச்சினையினால் தனது முதலாளியையே அவன் கொன்றுவிட நேர்கிறது. மனோயிலும் அவனது மனைவி ரோஸாவும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிடுகின்றனர். சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் நோக்கி நகரத் தொடங்கும் அவர்கள் வாழ்க்கை மெல்மெல்ல, நகரத்துக்கு வெகுதூரம் ஒரு கறுப்பின பிரசங்கி நடத்தும் கத்தோலிக்க தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபாடு ஏற்படுகிறது.

பிரேசில் நாட்டின் முக்கியமான இயக்குநரான கிளாபர் ரோச்சா இயக்கிய படம். இவரது படங்கள் கேன்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளைப் பெற்றுள்ளது.

படத்தின் ட்ரெய்லர்

மாலை 6.00 மணி ------ திரையிடல் இல்லை ------

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x