Published : 16 Dec 2017 05:34 PM
Last Updated : 16 Dec 2017 05:34 PM

சென்னை பட விழா | கேஸினோ | டிசம்.17 | படக்குறிப்புகள்

சென்னை 15-வது சர்வதேச பட விழாவில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்.17) கேஸினோ திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 9.45 மணி | THE MIGRUMPIES / DIE MIGRANTIGEN | DIR: AMAN T. RIACHI | AUSTRALIA | 2017 |98'

ஆவணப்படத்தில் நடிப்பதற்காக தயாராகிறார்கள் இரண்டு நண்பர்கள் பென்னி, மார்கோ. இருவருமே தனவான்கள். ஆனால், ஆவணப்படத்துக்காக பென்னியும் மார்கோவும் புலம்பெயர்ந்தவர்கள் போலவும் சிறு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் போலவும் நடிக்கிறார்கள். அவர்கள் நடிப்பு ஒருகட்டத்தில் விபரீதமாகிறது. நிலவரம் அவர்களுக்கு எதிராக திரும்ப காட்சிகள் விரிகின்றன.

பகல் 12.15 மணி | MARACAIBO | DIR: MIGUEL ANGEL ROCCA | ARGENTINA | 2017 | 95'

ஒரு தலைமை மருத்துவர் பற்றி கதை. அவரது மகன் கொலை செய்யப்படுகிறார். அதை செய்தது மகனின் நண்பனே. கொலையாளி கைது செய்யப்படுகிறார். என்றாலும் தந்தை மேலும் விசாரணை செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்.

பிற்பகல் 2.45 மணி | RADIANCE / HIKARI | DIR: NAOMI KAWASE | JAPANESE | 2017 | 101'

பார்வை குறைபாடு மிக்க மிசேகோ, திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஒரு திரையிடல் தருணத்தில் மெதுவாக பார்வை இழந்துவரும் பழைய புகைப்படக் கலைஞரான நகமோரியை சந்திக்கிறார். மிசோகோ விரைவில் நகமோரியின் புகைப்படங்களை தேடிக் கண்டுபிடிக்கிறார். இதனால் அவர் தனது கடந்த காலத்திற்கு திரும்புகிறார். அவள் கண்களுக்கு இதுவரை தெரியாமல் இருந்த பிரகாசமான உலகத்தை அவரோடு இணைந்து முதன்முதலாகப் பார்க்கத் தொடங்குகிறாள்.

பிற்பகல் 4.45 மணி | HOME / DOM | DIR: FIEN TROCH | BELGIUM / FLEMISH / DUTCH| 2017 |103'

இரண்டு தலைமுறைகளுக்கு நடுவில் இருக்கும் சிக்கல். நம்பிக்கை, துரோகம், நட்பு என்ற மெல்லிய கோட்டுக்கு நடுவில் நடக்கும் விஷயங்கள் என்னென்ன? தவறு யார் பக்கம்? லீனா, ஒரு இளம் பெண் பிடிவாதமான முகம் கொண்டவள். பள்ளிக்கூட ஆசிரியர்களைப் பற்றி வதந்திகளைப் பரப்புபவள், ஜான், பள்ளி மேற்பார்வையாளரின் எச்சரிக்கைகளை பொருட்படுத்துவதேயில்லை. சம்மி, வீட்டு சமையலறை எக்ஸார்ட் பேன் அருகிலேயே நின்று புகைப்பவன். தனது தாயின் கண்டனங்களை காது கொடுத்தே கேட்பது இல்லை. கெவின், இவனை வீட்டிலேயே வைத்திருக்கமுடியாது, எங்காவது சீர்திருத்தப் பள்ளியில்தான் கொண்டுபோய்விட வேண்டும் என கைகழுவி விட்டனர். தொலைக்காட்சி ஸ்மார்ட் போன், வீடியோ கேம்ஸ் என்று திரியும் பெற்றோர்கள் பேச்சை கேட்பதே இல்லை. இளம்பருவத்தினரின் நடத்தை சில நேரங்களில் அதிர்ச்சியைத் தருகிறது. இது பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான தொடர்பு இடைவெளியை மையமாகக் கொண்டது.

பிற்பகல் 7.00 மணி | NO DATE, NO SIGNATURE / NO DATE, NO SIGN | DIR: VAHID JALILVAND | PERSIAN | 2017 | 100'

தடயவியல் நிபுணர் டாக்டர். நரிமான் ஒரு கார் விபத்தில் சிக்குகிறார். அதில் எதிரில் மோட்டர் சைக்கிளில் வந்தவரின் 8 வயது மகனுக்கும் அடிபடுகிறது. அவனை சிகிச்சைக்கு அழைத்து செல்ல கேட்டாலும், அவன் தந்தை மறுக்கிறார். அடுத்தநாள், அந்த சிறுவன் மர்மமான முறையில் இறந்து விட்டதாகவும், பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவரது மருத்துவமனையில் தெரிவிக்கப்படுகிறது. அந்த சிறுவனின் மரணத்துக்கு யார்காரணம். குழந்தை இறந்த சோகத்தில் நரிமானை சந்தேகப்படுவதுடன் அவரை கேவலமாகப் பேசுகிறார் பெற்ற தந்தை. ஆனால் நடந்ததே வேறு. மற்ற டாக்டர்கள் டயக்னிசிஸ் செய்யும்போது நடந்த தவறுதான் அவன் இறக்கக் காரணம் என்பது தாமதமாக தெரியவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x