Published : 18 Dec 2017 06:13 PM
Last Updated : 18 Dec 2017 06:13 PM

சென்னை பட விழா | அண்ணா | டிசம்.19 | படக்குறிப்புகள்

சென்னை 15-வது சர்வதேச பட விழாவில் செவ்வாய்க்கிழமை (டிசம்.19) அண்ணா திரையரங்கில் திரையிடப்படும் படங்களின் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 9.30 மணி | WEST / WESTEN | DIR: CHRISTIAN SCHWOCHOW | GERMAN / ENGLISH| 2013 | 102'

கிழக்கு ஜெர்மனி. 70களின் இறுதி. தனது காதலன் வாஸிலிஜின் மரணத்துக்கு 3 வருடங்களுக்கு பிறகு, நெல்லி, தனது மகன் அலெக்ஸுடன், பெர்லின் சுவரை தாண்டி, பழைய வாழ்க்கையை மறந்து, மேற்கு ஜெர்மனியில் புதிதாக வாழ்வை தொடங்க நினைக்கிறாள். ஆனால் மேற்கு பெர்லினின் அகதிகள் முகாமில்,வாஸிலிஜின் மாயமானதன் மர்மம் தொடர்பாக, அரசாங்கத்தின் ரகசிய போலீஸ் பிரிவு, நெல்லியை தொடர் விசாரணை செய்கிறது. அவன் ஒற்றனாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதகாவும் நெல்லிக்கு தெரியவருகிறது. நெல்லிக்கு என்ன ஆனது? அவளது காதலன் உண்மையில் யார்?

பகல் 12 மணி | I'M A KILLER / JESTEM MORDERCA | DIR: MACIEJ PIEPRZYCA | POLISH | 2017 | 110'

70களில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களின் தாக்கத்தில் உருவான படம். இப்படத்தில் ஒரு இளம் போலீஸ் துப்பறியும் அதிகாரி தனது குழுவுடன் சென்று பெண்களைத் தொடர்ந்து கொலைகள் செய்பவனை தேடிப் பிடிக்கிறார். அந்த கொலைகாரன் சலேசியன் காட்டேரி என்ற புனைபெயரில் உலா வருபவன்.

பிற்பகல் 2.30 மணி | PURE HEARTS / CUORIPURI | DIR: ROBERTO DE PAOLIS | ITALIAN | 2017 | 115'

அக்னீஸ் மற்றும் ஸ்டீஃபனோ இருவருக்கும் நிறைய வேறுபாடு. ஆக்னீஸுக்கு 17 வயதுதான் ஆகிறது, தனது தாயுடன் வாழ்கிறாள். (கொஞ்சம் கோபப்படும் குணம். ஆனால் அர்ப்பணிப்புள்ள பெண்மணி மற்றும் வழக்கமாக சர்ச்க்கு செல்லக்கூடியவள்) ஆக்னிஸ் திருமணம் செய்துகொள்ள சாக்குபோக்கு சொல்லி வருகிறாள். ஸ்டீபனுக்கு ஒரு 25 வயது இளைஞன், ஒரு வன்முறைத்தனமான கோபமும், கடினமான கடந்தகாலம் கொண்டவன், ஜிப்சி முகாமுடன் எல்லைகளை கொண்டிருக்கும் ஒரு கார்டனில் ஒரு வார்டனாக பணிபுரிகிறான். அவர்களின் எதிர்பாராத சந்திப்பு தூய்மையான ஒரு அன்பை உருவாக்குகிறது, கிடைக்கும் சிற்சிலநேரங்களில் ஒருவருக்கொருவர் உதவிகரமாக உள்ளனர். முதல் முறையாக அவர்கள் காதலிக்கத் தொடங்கும்போது ஆக்னிஸ்ஸின் தூய்மை எனும் மாயை நொறுங்குகிறது. இதுகுறித்து அவள் யோசிக்கத் தொடங்குகிறாள். தனது பாவம் அழிக்கப்படும் என்ற நம்பிக்கையில் ஒரு தீவிர முடிவை எடுக்க வழிவகுக்கிறது.

மாலை 4.30 மணி | NEGAR / NEGAR | DIR: RAMBOD JAVAN | PERSIAN | 2017 | 100'

போலீஸ் தகவலின்படி, நெகரின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். ஆனால் நெகர் உணர்வது வேறு. ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த நெகார் மரணத்தைப் பற்றிய சிந்தனை அவருக்கு இருந்திருக்கவில்லை என்பதுதான். அவர் வழக்கத்திற்கு மாறான விசாரணை மூலம் உண்மையை வெளிக்கொணரத் தொடங்குகிறார்.

மாலை 7.15 மணி | THE MIGRUMPIES / DIE MIGRANTIGEN | DIR: AMAN T. RIACHI | AUSTRALIA | 2017 |98'

ஆவணப்படத்தில் நடிப்பதற்காக தயாராகிறார்கள் இரண்டு நண்பர்கள் பென்னி, மார்கோ. இருவருமே தனவான்கள். ஆனால், ஆவணப்படத்துக்காக பென்னியும் மார்கோவும் புலம்பெயர்ந்தவர்கள் போலவும் சிறு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் போலவும் நடிக்கிறார்கள். அவர்கள் நடிப்பு ஒருகட்டத்தில் விபரீதமாகிறது. நிலவரம் அவர்களுக்கு எதிராக திரும்ப காட்சிகள் விரிகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x