Published : 27 Dec 2021 03:20 PM
Last Updated : 27 Dec 2021 03:20 PM

உதகையில் டிசம்பர் 29-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

உதகை: உதகையில் டிசம்பர் 29-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நீலகிரி மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் உதகை,சேரிங்கிராஸ், கார்டன் சாலையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் டிசம்பர் 29-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இதில் 8-ம்வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள்,ஐடிஐ தொழில் கல்வி பெற்றவர்கள், செவிலியர், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்துவித தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இம்முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இணையதள முகவரியில் பதிவு செய்வதோடு, வேலைநாடுபவர்கள் அந்த இணையதளத்தில் முன்பதிவும் செய்து கொள்ளலாம். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம்வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைகள் ஆகியவற்றுடன் மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக் கடன் குறித்தவழிகாட்டுதல்களும் மேற்கொள்ளப்பட உள்ளது.

இது தொடர்பான கூடுதல் விவரங் களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 0423-2444004 அல்லது 96553 94765 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x