100% எத்​த​னாலில் இயங்கும் வாகனங்களுக்கு அனுமதி: மத்திய அரசு விதி​முறை​களில் திருத்தம்

100% எத்​த​னாலில் இயங்கும் வாகனங்களுக்கு அனுமதி: மத்திய அரசு விதி​முறை​களில் திருத்தம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: இந்​தி​யா​வில் 100% சுத்​த​மான எத்​த​னாலில் இயங்​கக்​கூடிய ‘ஃப்​ளெக்ஸ் ஃபியூல்’ வாக​னங்​களின் பயன்​பாட்​டுக்கு அனுமதி அளிக்​கும் வகை​யில் மத்​திய மோட்​டார் வாகன விதிகளில் திருத்​தங்​களை் செய்து மத்​திய சாலைப் போக்குவரத்து மற்​றும் நெடுஞ்​சாலைத்​துறை அமைச்​சகம் அதிகாரப்​பூர்வ அறி​விப்பை வெளி​யிட்​டுள்​ளது.

வெளி​நாடு​களி​லிருந்து கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்வதைக் குறைக்​க​வும், தற்​போதைய மத்​திய கிழக்கு நாடுகளின் போரி​னால் உரு​வாகி​யுள்ள ஆற்​றல் நெருக்​கடியைச் சமாளிக்கவும் மத்​திய அரசு இந்த முக்​கிய முடிவை எடுத்​துள்​ளது.

அதன்​படி, 100% எத்​த​னால் அல்​லது அதி​களவி​லான எத்​த​னால் கலந்த பெட்​ரோலால் (E20 முதல் E100 வரை) இயங்​கும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்ட பிரத்​யேக வாக​னங்​களுக்கு மட்​டுமே இந்த அனு​மதி பொருந்தும். சாதாரண பெட்​ரோல் அல்​லது E20 (20% எத்தனால் கலந்த பெட்​ரோல்) இன்ஜின் கொண்ட வாக​னங்​களில் E85 அல்​லது E100 எரிபொருளைப் பயன்​படுத்த முடி​யாது என்று நெடுஞ்​சாலை துறை அமைச்​சகத்​தின் மூத்த அதி​காரி தெளிவுபடுத்​தி​யுள்​ளார்.

100% எத்​த​னாலில் இயங்கும் வாகனங்களுக்கு அனுமதி: மத்திய அரசு விதி​முறை​களில் திருத்தம்
டெல்டா மாவட்டங்களில் மழைநீரில் மூழ்கிய 6,000 ஏக்கர் நெற்பயிர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in