டெல்டா மாவட்டங்களில் மழைநீரில் மூழ்கிய 6,000 ஏக்கர் நெற்பயிர்

வடிகால்களை முறையாக தூர் வாராததே காரணம் என விவசாயிகள் குற்றச்சாட்டு
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக திருச்சி மாவட்டம் எளமனூர், கொடியாலம் பகுதியில் நீரில் மூழ்கியுள்ள விளைநிலங்கள்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக திருச்சி மாவட்டம் எளமனூர், கொடியாலம் பகுதியில் நீரில் மூழ்கியுள்ள விளைநிலங்கள்.

Updated on: 
1 min read

மயிலாடுதுறை/ தஞ்சாவூர்/ திருவாரூர்: வடகிழக்​குப் பருவ மழை மற்​றும் வங்​கக் கடலில் உரு​வாகி​யுள்ள புயல் சின்​னம் காரண​மாக டெல்டா மாவட்​டங்​களில் கடந்த சில நாட்​களாக பலத்த மழை பெய்து வரு​கிறது. இதில், 6,000 ஏக்​கர் நெல் வயல்​கள் மழைநீரில் மூழ்​கி​யுள்​ள​தால் விவசாயிகள் கவலை அடைந்​துள்​ளனர்.

மயி​லாடு​துறை மாவட்​டத்​தில் நிகழாண்டு 1.60 லட்​சம் ஏக்​கரில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்​ணயிக்​கப்​பட்ட நிலை​யில், இது​வரை 1 லட்​சம் ஏக்​கர் சாகுபடி பணிகள் நிறைவடைந்​துள்​ளன. இந்​நிலை​யில், தொடர்ந்து கனமழை பெய்து வரு​வ​தால் மயி​லாடு​துறை மாவட்​டத்​தில் மயி​லாடு​துறை, திரு​விழந்​தூர், பல்​ல​வ​ராயன்​பேட்டை, பொன்​னூர், பாண்​டூர், திரு​வெண்​காடு, மங்​கைமடம், கொள்​ளிடம், செம்​பனார்​கோவில் வட்​டாரங்​களில் பல்​வேறு கிராமங்​களில் 5,000 ஏக்​கர் இளம் பயிர்​கள் நீரில் மூழ்​கி​யுள்​ளன.

வடிகால் வாய்க்​கால்​கள், ஆறுகள் முறை​யாக தூர் வாராததால் பல இடங்​களில் இளம் பயிர்​கள் மழைநீரில் மூழ்​கி​யுள்​ள​தாகவும், பல ஆறுகளில் ஆகாயத்​தாமரை செடிகள் மண்​டியுள்​ள​தால் நீரோட்​டம் தடைபட்​டுள்​ள​தாகவும் விவசாயிகள் புகார் தெரி​விக்​கின்​றனர்.

இதேபோல, தஞ்​சாவூர் மாவட்​டம் திரு​வை​யாறு வட்​டாரத்​துக்கு உட்​பட்ட விளாங்​குடி, வில்​லியநல்​லூர், செம்​மங்​குடி, தென்​கச்சி போன்ற பகுதி​யில் 500 ஏக்​கரில் நடவு செய்​யப்​பட்ட வயல்​களில் மூன்​றடி உயரத்​துக்கு மழைநீர் தேங்​கி​யுள்​ள​தால் பயிர்​கள் அழுகும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. இதேபோல, 100 ஏக்​கர் நாற்​றங்​கால் வயலிலும் மழைநீர் தேங்​கி​யுள்​ள​தால் விவசாயிகள் கவலை அடைந்​துள்​ளனர்.

இது​குறித்து விவசாயிகள் கூறுகை​யில், “சென்​னை​யில் பரு​வ​மழை தொடங்​கும் முன்பே முன்​னெச்​சரிக்கை நட​வடிக்​கைகளை எடுக்​கும் தமிழக அரசு, டெல்டா பகுதி​யில் அலட்​சி​யம் காட்​டு​கிறது. தற்​போது வரை ஏக்​கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செல​வழித்து நடவு செய்​யப்​பட்ட பயிர்​கள் நீரில் மூழ்​கி​யுள்​ள​தால் என்ன செய்​வதென்று தெரிய​வில்லை. பயிர்​கள் பாதிக்​கப்​பட்ட வயல்​களை கணக்​கெடுத்து மாவட்ட நிர்​வாகம் நிவாரணம் வழங்க வேண்​டும்” என்​றனர்.

இதேபோல, திரு​வாரூர் மாவட்​டம் குட​வாசல் அருகே 500 ஏக்​கர் சம்பா நெற்​பயிர்​கள் மழைநீரில் மூழ்​கி​யுள்​ளன. குறிப்​பாக குட​வாசல் அருகே அரசூர், மேலப்​பாளை​யூர், ஓகை உள்​ளிட்ட பகுதி​களில் 30 நாட்​கள் ஆன பயிர்​கள் அனைத்​தும் மழைநீரில் மூழ்​கி​யுள்​ளன. ஏக்​கருக்கு இது​வரை ரூ.10,000 வரை செலவு செய்​துள்ள நிலை​யில், தொடர்ந்து மழை பெய்து வரு​வ​தால் நெற்​பயிர்​கள் அழுகும் நிலை ஏற்​பட்​டுள்​ள​தாக விவசாயிகள் கவலை தெரி​வித்​தனர்.

இது​குறித்து வேளாண்​மைத் துறை அலு​வலர்​கள் கூறியது: மழை தொடர்ந்து பெய்து வரு​வ​தால் சில இடங்​களில் வயல்​களில் மழைநீர் தேங்​கி​யுள்​ளது. மழை பாதிப்பு குறித்து வேளாண் துறையினர் உரிய ஆய்வு செய்து, அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்றனர்.

<div class="paragraphs"><p>கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக திருச்சி மாவட்டம் எளமனூர், கொடியாலம் பகுதியில் நீரில் மூழ்கியுள்ள விளைநிலங்கள்.</p></div>
“அரசின் தோல்விகளை மறைக்கவே அன்பில் மகேஸ் கைது” - உதயநிதி கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in