தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,200 உயர்வு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,200 உயர்வு
Updated on
1 min read

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.1,200 அதிகரித்து, ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு மேலாக, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருக்கிறது.

அந்த வகையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.1 லட்சத்து 10 ஆயிரமாக இருந்த நிலையில், இன்று பவுனுக்கு ரூ.1,200 அதிகரித்து, ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கு விற்கப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.150 அதிகரித்து, ரூ.13,900-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் 24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.1,312 அதிகரித்து ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 312 ஆக இருந்தது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.250 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாகவும் இருந்தது.

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,200 உயர்வு
பழநி நில மோசடி வழக்கில் கைதான 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in