பழநி நில மோசடி வழக்கில் கைதான 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

பழநி நில மோசடி வழக்கில் கைதான 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
Updated on
1 min read

திண்டுக்கல்: பழநி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரின் ஜாமீன் மனுக்களை திண்டுக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரம் பகுதியில் உள்ள தண்டபாணி மடம் நில மோசடி தொடர்பாக 11 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், இடத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி, வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இதில், முருகதாஸ், சேதுபதி, அன்வர்தீன் ஆகிய மூவரும் திண்டுக்கல் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் இன்று மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மூவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த முருகதாஸ், சேதுபதி, வெள்ளத்துரை, அன்வர்தீன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். போலீஸ் காவல் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், நான்கு பேரையும் திண்டுக்கல் ஜே.எம். 1 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பழநி நில மோசடி வழக்கில் கைதான 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
தாய்லாந்தில் பள்ளி ஒன்றில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூடு - 7 பேர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in