சென்னை: தங்கம் விலை நேற்று ஒரு பவுன் ரூ.91,360க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.92,320 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்கா ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளதாக நிலவும் எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை கடந்த 9-ம் தேதி முதல் குறையத் தொடங்கியது.
நாள்தோறும் விலை இறங்கி வந்த நிலையில், 11 மாதங்களுக்கு பிறகு, கடந்த 17-ம் தேதி ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழ் இறங்கியது. அதன்பிறகும் தங்கம் விலை சரிவு தொடர்ந்தது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நவ.23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சற்றே அதிகரித்தது. அதேநேரத்தில், நேற்று (நவ.25) தங்கம் விலை சற்று குறைந்தது.
இந்நிலையில், இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 120 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,540 ஆக விற்பனையாகிறது, பவுனுக்கு ரூ.960 அதிகரித்து ஒரு பவுன் ரூ.92,320-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.95 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,440-க்கும், ஒரு பவுன் ரூ.75,520க்கும் விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கம் கிராமுக்கு ரூ.131 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,589-க்கும் ஒரு பவுன் ரூ.1,00,712-க்கும் விற்பனையாகிறது.
அதேநேரத்தில் வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. கிராம் ரூ.165-க்கும். ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,65,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.