Published : 09 Mar 2023 04:26 AM
Last Updated : 09 Mar 2023 04:26 AM

ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்தது - நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.41,320-க்கு விற்பனையாகிறது. இதனால், தங்கம் வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 2-ம் தேதி ஒரு பவுன் ரூ.44,040-க்கு புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர் விலை குறைந்து மார்ச் 2-ம் தேதி ரூ.41,944-க்கு விற்பனையானது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. குறிப்பாக, நேற்று ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.

அதாவது, தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.70 குறைந்து ரூ.5,165-க்கு விற்பனையானது. பவுன் ஒன்றுக்கு ரூ.560 குறைந்து ரூ.41,320-க்கு விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.44,216-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை குறைந்து வருவதைக் கண்டு நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.67,500 ஆக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x