Published : 06 Mar 2023 06:09 AM
Last Updated : 06 Mar 2023 06:09 AM

ரஷ்யாவிடமிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி உச்சம்: பிப்ரவரியில் நாளொன்றுக்கு 16 லட்சம் பீப்பாய்கள் இறக்குமதி

கோப்புப்படம்

புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த பிப்ரவரி மாதம் உச்சம் தொட்டுள்ளது.

கடந்த மாதத்தில் நாளொன் றுக்கு 16 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிட மிருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது ஈராக் மற்றும் சவூதிஅரேபியா ஆகிய இருநாடுகளிடமிருந்து இறக்குமதி செய்த அளவைவிட அதிகம் ஆகும்.

இந்தியா அதன் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தைவெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் ஈராக், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய நாடுகள் முதன்மையான இடத்திலும் இருந்து வந்தன. தற்போது அந்நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி ரஷ்யா முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடைவிதித்தது. இந்தத் தடையால் நெருக்கடிக்கு உள்ளான ரஷ்யா, தன் நாட்டு கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் வழங்குவதாக அறிவித்தது. அதுவரையில், ரஷ்யாவிடமிருந்து 2% அளவிலே கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துவந்த இந்தியா, ரஷ்யாவின் சலுகை விலை அறிவிப்புக்குப் பிறகு அந்நாட்டிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியது.

இந்நிலையில் தற்போது ஈராக், சவூதி அரேபியாவைவிட இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிகஅளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவருகிறது. தற்போதுஇந்தியாவின் மொத்த இறக்குமதியில் ரஷ்யாவின் பங்களிப்பு 35 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் கடந்தமாதம் ஐக்கிய அரபு அமீரகம்அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடம் பிடித்துள்ளது. ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தியாவுக்கான அமெரிக்காவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி 38 சதவீதமும் சவூதியின் ஏற்றுமதி 16 சதவீதமும் சரிந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x