Published : 07 Feb 2023 04:21 AM
Last Updated : 07 Feb 2023 04:21 AM

தங்கம் பவுன் ரூ.43 ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னை: தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. நேற்று ஒரு பவுன் ரூ.240 அதிகரித்து ரூ.42,920-க்கு விற்பனையானது.

கடந்த சில நாட்களாக தங்கம்விலை அதிகரித்து வந்தது. குறிப்பாக, கடந்த 2-ம் தேதி ஒரு பவுன் ரூ.44,040 என்ற புதிய உச்சத்தை எட்டியது. பின்னர், 3 நாட்களாகத் தங்கம் விலை குறைந்தது. நேற்று முன்தினம் தங்கம் ஒரு பவுன் ரூ.42,680-க்கு விற்பனையானது.

இந்நிலையில், 3 நாட்களுக்குப் பிறகு நேற்று தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.5,365 ஆகவும், பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.42,920 ஆகவும் இருந்தது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.45,816 ஆக இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x