Published : 31 Jan 2023 03:49 PM
Last Updated : 31 Jan 2023 03:49 PM

உள்நாட்டில் 2.5 கோடி வாகனங்கள் விற்பனை: மாருதி சுசுகி கடந்து வந்த பாதை

கோப்புப்படம்

புது டெல்லி: இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி நிறுவனம் உள்நாட்டில் இதுவரையில் மொத்தம் 2.5 கோடி வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த மைல்கல்லை கடந்த 9-ம் தேதி மாருதி நிறுவனம் எட்டியுள்ளது.

இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனம்தான் மாருதி சுசுகி. இந்திய சாலைகளில் றெக்கை கட்டி பறக்கும் நான்கு சக்கர வாகனங்களில் மாருதி சுசுகி நிறுவன கார்களின் பங்கு கொஞ்சம் அதிகம். பயணிகள் கார் சந்தையில் சுமார் 44 சதவீதத்தை இந்நிறுவனம் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த 1981-ல் இந்நிறுவனம் நிறுவப்பட்டது. 1983-ல் முதல் காரை அறிமுகம் செய்தது. அப்போது முதல் இப்போது வரையில் மக்களின் ரசனை மற்றும் தேவைகளுக்கு ஏற்ற வகையில் கார்களை மாருதி தயாரித்து வருகிறது. அதன் ஊடாக வாகன பயன்பாட்டில் மாற்றத்தை கொண்டு வந்தது மாருதி. இப்போது உள்நாட்டில் 2.5 கோடி வாகன விற்பனையை கடந்துள்ளது.

மாருதி கடந்து வந்த பாதை

  • முதல் காரான ‘மாருதி 800’ காரை கடந்த 1983-ல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது மாருதி சுசுகி நிறுவனம்.
  • ஆம்னி, எஸ்டீம், சென் மற்றும் 1000 போன்ற கார்கள் மாருதியின் போர்ட்ஃபோலியோவில் இணைந்தது. 1997 வரை இந்திய சாலைகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமான கார்களை மாருதி கொண்டிருந்தது.
  • மலிவு விலையிலான காருக்கு பெயர் பெற்ற மாருதி நிறுவனம் சந்தையில் கிசாஷி, கிராண்ட் விட்டாரா மற்றும் நெக்ஸா போன்ற மாடல்களை அறிமுகம் செய்து தனது ரூட்டை மாற்றியது.
  • 2006-ல் ஐந்து மில்லியன் மொத்த உள்நாட்டு விற்பனையை எட்டியது.
  • சுசுகி மோட்டார் நிறுவனம் 2007-ல் மாருதி சுசுகி இந்தியா என மாற்றப்பட்டது. கடந்த 2020-ல் இதன் பங்கு சதவீதம் 56.37% என உயர்ந்தது.
  • 2010-ல் வேகன் ஆர் சிஎன்ஜி காரை அறிமுகம் செய்தது மாருதி.
  • 2022-ல் கிராண்ட் விட்டாரா எனும் ஹைப்ரிட் எஸ்யூவி மாடல் காரை அறிமுகம் செய்தது மாருதி.
  • மாருதியின் அண்மைய வெளியீடாக ஐந்து கதவுகள் கொண்ட மாருதி ஜிம்னி அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x