Last Updated : 31 Dec, 2016 10:46 AM

 

Published : 31 Dec 2016 10:46 AM
Last Updated : 31 Dec 2016 10:46 AM

நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பொருளாதாரம் 7.2% வளர்ச்சியடைந்துள்ளது: நிதியமைச்சகம் தகவல்

நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்திய பொருளாதாரம் 7.2 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த 2016-ம் ஆண்டு குறித்த மறு ஆய்வு குறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய பொருளாதாரம் 7.2% வளர்ச்சி யடைந்துள்ளதால் சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் இந்தியா தனது இடத்தை தக்கவைத்துள்ளது. மேலும் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. ஏப்ரல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் சில்லரை மற்றும் மொத்தவிலை பணவீக்கம் சராசரியாக முறையே 5.2 சதவீதம் மற்றும் 2.7 சதவீதமாக இருக்கிறது. செலவினத்தை முறைப் படுத்துதல் மற்றும் வருவாயை அதிகப்படுத்துவதற்கான முயற்சி கள் மூலம் நிதி பற்றாக்குறையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பணவீக் கத்தை குறைப்பதற்கான நடவடிக் கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பொருளாதார மந்த நிலை, சமீபத்திய பெட்ரோலியப் பொருட்கள் விலையேற்றம் உள்ளிட்ட பாதிப்புகள் இருந் தாலும் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. தவிர பண வீக்கமும் கட்டுக்குள் இருக்கிறது.

நிதிப் பற்றாக்குறை மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கிறது. மேலும் முதல் ஆறு மாதங்களில் பொருளா தார வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாக இருக்கிறது. இதனால் இந்தியா சர்வதேச அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x