Published : 19 Dec 2016 09:53 AM
Last Updated : 19 Dec 2016 09:53 AM

விசா இல்லாமல் இந்தியா வந்தேன்: அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட உபெர் சிஇஓ டிராவிஸ் கலாநிக்

கடந்த ஜனவரி மாதம் விசா இல்லாமல் இந்தியாவுக்கு வந்து விட்டேன். மிகவும் பதற்றமான சூழலைச் சந்திக்க நேரிட்டது. உயர்மட்ட தலையீடுக்கு பின்பே என்னால் இந்தியாவுக்குள் வர முடிந்தது என்று உபெர் நிறுவனத்தின் டிராவிஸ் கலாநிக் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட போது இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் ஸ்டார்ட்அப் இந்தியா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டிராவிஸ் இந்தியா வந்திருந்தார். பெய்ஜிங்கிலிருந்து ஜனவரி மாதம் 16-ம் தேதி காலை இந்தியா வந்தடைந்தார். இங்கு வந்த பிறகே அவரது விசா முறை யாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது. பிறகு உள்துறை செயலர் மற்றும் உளவுத்துறை இயக்குநர் தலையீட்டுக்குப் பிறகே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

``தேதிகளை தவறாக புரிந்துக் கொண்டு விசாவை முறையாக வைத்திருக்காமல் பெய்ஜிங்கி லிருந்து இந்தியா வந்தேன். மிக பயமான சூழல் அது. தற்போது நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த்தான் எனக்கு உதவி புரிந்தார். இந்தி யாவில் நுழைவதற்கு உதவிய அமிதாப் காந்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று டிராவிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அமிதாப் காந்த் கூறுகையில், ``அன்றைக்கு இரவு 2.30 மணிக்கு எழுந்தோம். நான் மட்டுமல்லாது உள்துறை செயலர் மற்றும் உளவுத்துறை இயக்குநரும் எழுந்து அவரை அழைத்து வந்தோம். அவர் சீனாவுக்கே திரும்பி செல்வதாக இருந்தது. பிறகு ஸ்டார்ட் அப் இந்தியா நிகழ்ச்சி இருப்பதால் அவர் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் அழைத்து வந்தோம்’’ என்று தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் 14-ம் தேதி இந்தியா சுற்றுப்பயணம் வந்த டிராவிஸ் கலாநிக் நேற்று முன் தினம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். அப்போது டிராவிஸ் கலாநிக், இதுபோன்று உயர்மட்ட தலை யீட்டின் மூலமாக எத்தனை பேர் இங்கு அனுமதித்துள்ளீர்கள் என்று அமிதாப் காந்திடம் நகைச் சுவையாக கேட்டுள்ளார். அதற்கு அமிதாப் காந்த் நீங்கள் மட்டும்தான் என்று பதிலளித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கரை சந்தித்த அனுபவத்தையும் டிராவிஸ் பகிர்ந்து கொண்டுள்ளார். ``டெண் டுல்கரை சந்தித்தது மிக அருமை யாக இருந்தது. அவரிடம் இங்கி லாந்து-இந்தியா டெஸ்ட் மேட்ச் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். சல்மான் கானுடனும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். அவ ரிடம் இந்தியாவில் திரைப்படம் எவ் வாறு உருவாக்கப்படுகிறது என்பது குறித்து பேசிக்கொண்டிருந்தேன்’ என்று டிராவிஸ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x