Published : 25 Dec 2022 06:53 AM
Last Updated : 25 Dec 2022 06:53 AM

மின்வாகனம் வாங்க குறைந்த வட்டியில் கடன் வழங்குங்கள் - வங்கிகளுக்கு நிதின் கட்கரி வேண்டுகோள்

தானே: மின்வாகனம் வாங்க விரும்பும் மக்களுக்கு வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் கூட்டறவு வங்கி ஒன்றின் ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதின் கட்கரி, இந்தியாவில் மின்வாகனங்களின் பயன்பாடு குறித்து பேசினார். அப்போது அவர் “இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை பயன்பாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பது என்னுடைய கனவு. அரசுப் பேருந்துகள் மின் வாகனமாக மாறினால் பயணக் கட்டணம் கணிசமாகக் குறையும். மத்திய அரசு மின் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க தீவிர முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. வங்கிகளும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். மின்வாகனம் மற்றும் பசுமை எரிசக்தியில் ஓடும் வாகனங்களை வாங்க விரும்பும் மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வங்கிகள் முன்வர வேண்டும்” என்று தெரிவித்தார்.

மின்வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால் நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும், காற்று மாசுப்பாடு குறையும். அதற்கேற்ப இந்தியாவில் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் மின் வாகனத் தயாரிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. பல புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மின் வாகனத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x