Published : 20 Dec 2016 10:27 AM
Last Updated : 20 Dec 2016 10:27 AM

டாடா நிறுவனங்களிலிருந்து சைரஸ் மிஸ்திரி ராஜினாமா: டாடா சன்ஸ் இயக்குநர் குழுவில் நீடிக்க முடிவு

டாடா குழும நிறுவனங்கள் அனைத்திலிருந்தும் தனது பதவியை சைரஸ் மிஸ்திரி ராஜினாமா செய்துள்ளார்.

பட்டியலிடப்பட்ட அனைத்து டாடா குழும நிறுவனங்களில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ள அவர், டாடா சன்ஸ் இயக்குநர் குழுவில் நீடிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத் துள்ள அறிக்கையில், நேர்மையை நிலைநாட்டவும், சுத்தமான நிர்வாகத்தை கொண்டு வருவதற் காவும் போராடி வருகிறேன். டாடா குழுமத்தின் நலனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

நிர்வாக சீர்திருத்தத்தை ஊழியர்கள் நலனுக்காகவும், நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள பொதுமக்களின் நலனுக்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளேன். இருப்பினும் நிறுவனங்களின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் (இஜிஎம்) மூலம் அதை செயல் படுத்த உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இப்போதைய முடிவின் மூலம் சிறிய தளத்திலிருந்து தனது போராட்டத்தை பெரிய தளத்துக்கு மாற்றியுள்ளதாகவும் எந்த தளத்தில் பங்கு மற்றும் சட்ட திட்டங்களால் தனது செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியாதோ அங்கிருந்து செயல்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வெளியிலிருந்து ஆதரவு தேவை என்று கருதவில்லை. கடந்த 50 ஆண்டுகளாக எனது குடும்பம் டாடா குழுமத்துக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளது. நாங்கள் எப்போதுமே சரியான பிரச்சினைக்கு சரியான தருணத்தில் குரல் கொடுத்துள்ளோம். ஒரு போதும் விளைவுகளைப் பற்றி யோசித்தது கிடையாது என்று கடிதத்தில் மிஸ்திரி தெரிவித்துள் ளார். கடந்த அக்டோபர் 24-ம் தேதி ரத்தன் டாடா மேற்கொண்ட சதி திட்டத்துக்கான பின்னணியை அறிந்து கொள்ள 8 வார காலம் காத்திருந்தும் பதில் கிடைக்க வில்லை.

டாடா குழுமத்தை உருவாக்கிய ஜாம்ஜெட்ஜி கொண்டு வந்த பாரம்பரியத்தை கட்டிக் காப்பாற்ற நான் மேற்கொண்ட நடவடிக்கை தான் எனது வெளியேற்றத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது. சிறந்த நிர்வாகம், நேர்மையான வர்த்தகம் ஆகியவைதான் பல சந்தர்ப்பங்களில் மிகப் பெரிய இடைஞ்சலாக இருந்துள்ளது. இதை சிலர் எதிர்த்துள்ளனர்.

ரத்தன் டாடா மற்றும் நோஷிர் சோனாவாலா ஆகியோர் டாடா அறக்கட்டளையிலிருந்து ஓய்வுபெற்று பலமுறை டாடா சன்ஸில் சேர்ந்துள்ளனர். இவர்கள் டாடா சன்ஸ் நிறுவனங்களில் எத்தகைய முடிவையும் எடுக்க விடுவதில்லை. இந்திய நிறுவனங் கள் மட்டுமல்ல, வெளிநாட்டு நிறுவனங்களிலும் இதேதான் நிலைமை. டாடா குழும நலனை காப்பதும், அதன் நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் தொலை நோக்கு எண்ணத்தை பூர்த்தி செய்யவும் தனது கடைசி மூச்சு இருக்கும் வரை பாடுபடப் போவதாக மிஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x