Last Updated : 04 Nov, 2016 04:28 PM

 

Published : 04 Nov 2016 04:28 PM
Last Updated : 04 Nov 2016 04:28 PM

ஓ.என்.ஜி.சி எரிவாயுவை எடுத்ததற்காக ரிலையன்ஸிடமிருந்து 1.55 பில்லியன் டாலர்கள் இழப்பீடு கோரும் மத்திய அரசு

கிருஷ்ணா கோதாவரி (கே.ஜி.) படுகையில் அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி.யிடமிருந்து 7 ஆண்டுகளாக இயற்கை எரிவாயு எடுத்து வரும் ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து 1.55 பில்லியன் டாலர்கள் கோரியுள்ளது மத்திய அரசு.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திடம் 1.55 பில்லியன் டாலர்கள் தொகை கேட்டு மத்திய எண்ணெய் வளத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக இந்த விவகாரத்தில் நெருக்கமாக உள்ள செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீதிபதி ஏ.பி.ஷா கமிட்டியும் கிருஷ்ணா கோதாவரி படுகைக்கு அடுத்து உள்ள ஓ.என்.ஜி.சி அரசு நிறுவன எண்ணெய் வயல்களிலிருந்து கடந்த 7 ஆண்டுகளாக இயற்கை எரிவாயுவை ரிலையன்ஸ் எடுத்துவருவததற்கு அந்த நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“அரசுக்கு சொந்தமான ஓ.என்.ஜி.சி எண்ணெய் வயல்களிலிருந்து 7 ஆண்டுகளாக இயற்கை எரிவாயுவை எடுத்து உற்பத்தி மற்றும் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது அநீதி, சுமார் 11 பில்லியன் கன மீட்டர்கள் இயற்கை எரிவாயு ஓ.என்.ஜி.சி.யிடமிருந்து வாரப்பட்டுள்ளது. ஏப்ரல் 1, 2009 முதல் மார்ச் 31, 2015 வரை இந்த நடவடிக்கையில் ரிலையன்ஸ் ஈடுபட்டுள்ளது” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“இந்த அநீதியான பயனை ஆர்.ஐ.எல். பெற்றதற்கு மத்திய அரசுதான் இழப்பீடு கோர வேண்டுமே தவிர ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு இதில் சட்ட அதிகாரம் இல்லை” என்று ஷா கமிட்டி தெரிவித்துள்ளது .சுமார் 11.122 பில்லியன் கன மீட்டர்கள் இயற்கை எரிவாயு ரிலையன்ஸிற்குச் சென்றுள்ளது. இதன் மதிப்பு ரூ.11,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x