Published : 04 Nov 2016 10:54 AM
Last Updated : 04 Nov 2016 10:54 AM

ஐசிஐசிஐ வங்கியில் வீட்டுக் கடன் வட்டி குறைப்பு

தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி வீட்டுக்கடனுக்கான வட்டியை 0.15 சதவீதம் குறைத்திருக்கிறது. முக்கிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வீட்டுக்கடன் வட்டியை குறைத்ததை அடுத்து ஐசிஐசிஐ வங்கியும் குறைத்திருக்கிறது.

ரூ.75 லட்சத்துக்கு மேல் வீட்டுக்கடன் வாங்கும் பெண்களுக்கான வட்டி விகிதம் 9.15 சதவீதமாகும். முன்பு 9.30 சதவீதமாக இருந்தது. இதர பிரிவினர்களுக்கான வட்டி விகிதம் 9.20 சதவீதமாகும். முன்பு 9.35 சதவீதமாக இருந்தது. புதிய வட்டி விகிதம் நவம்பர் 2 முதல் அமலுக்கு வருகிறது.

முக்கிய வங்கிகள் வட்டியை குறைத்த சூழ்நிலையில் இதர வங்கிகளும் வட்டியைக் குறைக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x