Published : 06 Nov 2016 12:59 PM
Last Updated : 06 Nov 2016 12:59 PM

பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் 11.5% சரிவு

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 11.5 சதவீதம் சரிந்து ரூ.549 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.621 கோடியாக இருந்தது. அதே சமயத்தில் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.13,701 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.14,218 கோடியாக உயர்ந்திருக்கிறது.

வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை 34.6 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.1,882 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இப்போது ரூ. 2,533 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

வங்கியின் மொத்த வாராக்கடன் 13.63 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் செப்டம்பர் காலாண்டில் மொத்த வாராக்கடன் 6.36 சதவீதமாக இருக்கிறது. நிகர வாராக்கடன் 3.99 சதவீதத்தில் இருந்து 9.10 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

தேனா வங்கி நிகர நஷ்டம் ரூ.44 கோடி

பொதுத்துறை வங்கியான தேனா வங்கியின் நிகர நஷ்டம் ரூ.44 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.38.70 கோடியாக நிகர லாபம் இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.2,872 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.2,914 கோடியாக உயர்ந்திருக்கிறது.

வங்கியின் மொத்த வாராக்கடன் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் 6.89 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 13.79 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடனும் 4.65 சதவீதத்தில் இருந்து 8.93 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x