Published : 17 Nov 2016 04:39 PM
Last Updated : 17 Nov 2016 04:39 PM

ரூபாய் நோட்டு நடவடிக்கை: கருத்து கூற பில்கேட்ஸ் மறுப்பு

கறுப்புப் பணத்தை ஒழிக்க கடந்த நவம்பர் 8-ம் தேதி 500,1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்த நடவடிக்கை துணிச்சலான நடவடிக்கை என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கூறியதாக செய்தி வெளியானது. ஆனால் இது குறித்து தனக்கு கருத்து ஏதும் இல்லை என பில்கேட்ஸ் மறுத்திருக்கிறார்.

தற்போது இந்தியா பெரும் பாலும் ரொக்க பணத்தை நம்பி இருந்தாலும் விரைவில் டிஜிட்டல் பேமெண்ட் முறைக்கு மாறும் என் றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆதார் கார்டு குறிப்பிடத்தகுந்த நட வடிக்கை. டிரம்ப் வெற்றி பெற்றதை குறித்து சொல்வதற்கு ஏதும் இல்லை. எந்த அதிபர், பிரதமர், முதலமைச்சர்களுடனும் நாங்கள் பணிபுரிவோம் என்று கூறினார்.

மேலும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் 30 நிமிடங்கள் பில்கேட்ஸ் கலந்துரையாடினார். இந்தியாவில் டிஜிட்டல் துறையில் பெரிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. பேமெண்ட் வங்கி மற்றும் அதற்கான தொழில்நுட் பத்தில் பெருமளவு முதலீடு செய்யப்பட்டுள்ளன. சுகாதாரம் மற்றும் விவசாயத்துக்கான செயலி களை உருவாக்க வேண்டும். எங்க ளுடைய அறக்கட்டளை இதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது என்றார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x