Published : 18 Nov 2016 10:46 AM
Last Updated : 18 Nov 2016 10:46 AM

ஜனவரியில் உடான் திட்டம்

உள்நாட்டில் ஒரு மணி நேரத்துக்குட்பட்ட விமானப் பயணத்துக்கு அதிகபட்சம் ரூ.2,500 கட்டணம் நிர்ணயிக்கும் `உடான்' திட்டம் கடந்த அக்டோபர் மாதம் 21-ம் தேதி அறிமுகப்படுத்தப் பட்டது. இந்த திட்டம் வரும் ஜனவரி முதல் செயல்பாட்டுக்கு வரும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ தெரிவித்தார். கேள்வி நேரத்தின் போது இவ்வாறு பதில் அளித்தார்.

குறைவான பயன்பாட்டில் 17 விமான நிலையங்களும், 407 விமான ஓடுபாதைகளும் இருக்கின்றன. இந்த திட்டத்தின் மூலம் விமான பயணம் அனைவருக்கும் சாத்தியமாகும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x