ரூ. 41,100 விலையில் ஹோண்டா பைக் அறிமுகம்

ரூ. 41,100 விலையில் ஹோண்டா பைக் அறிமுகம்
Updated on
1 min read

ஹோண்டா மோட்டார் சைக் கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் விலை குறைந்த மோட்டார் சைக்கிளை அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் விலை டெல்லியில் ரூ. 41,100 ஆகும்.

குஜராத்தில் நான்காவது உற்பத்தி ஆலையை அமைத்துவரும் இந்நிறுவனம் மேலும் ரூ. 1,000 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. சிடி 110 டிரீம் என்ற பெயரிலான இந்த மோட்டார் சைக்கிள் இந்த திறன் பிரிவில் மிகவும் விலை குறைவானதாகும் என்று நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் யத்வீந்தர் எஸ் குலேரியா தெரிவித்தார்.

புதிய மோட்டார் சைக்கிள் அறிமுகம் மூலம் நடப்பு நிதி ஆண்டில் 8 லட்சம் மோட்டார் சைக்கிளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in