Last Updated : 28 Nov, 2016 10:55 AM

 

Published : 28 Nov 2016 10:55 AM
Last Updated : 28 Nov 2016 10:55 AM

சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணம்: சுவிட்சர்லாந்திடம் நிர்வாக உதவி கேட்கும் இந்தியா

சுவிஸ் வங்கியில் கருப்புப் பணத்தை வைத்துள்ள இந்தியர்களைக் கண் டறிவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. சுவிஸ் வங்கியில் முறைகேடாக கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளதாக சிலர் மீது சந்தேகங்கள் எழுந்த நிலையில் முழு விவரங்களைக் கண்டறிவதற்கு நிர்வாக ரீதியிலான உதவிகளை வழங்குமாறு சுவிட்சர்லாந்து அரசிடம் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.

பங்குச்சந்தையில் பட்டியலிடப் பட்ட மூன்று நிறுவனங்கள், முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதி காரி, டெல்லியை மையமாக கொண்ட முக்கிய அரசு அதிகாரி யின் மனைவி, துபாயை மையமாக கொண்டு இயங்கும் இந்திய வம்சா வளி வங்கியாளர் மற்றும் குஜ ராத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சிலர் சுவிஸ் வங்கிகளில் முறை கேடாக பணத்தைப் பதுக்கியுள்ள தாக தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் முறைகேடாக வைத்திருக்கும் பணத்தைப் பற்றிய விவரங்களை அளிப்பதற்கான ஒப்பந்தம் சுவிட் சர்லாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே போடப்பட்டுள்ளது. அதன்படி சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்களின் பெயர்கள் 2018-ம் ஆண்டு தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் ஐந்து இந்தி யர்கள் பற்றிய தகவல்கள் வெளி யானது. அதேபோல அக்டோபரில் சில இந்தியர்களின் தகவலை ஸ்விஸ் வெளியிட்டது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை குறைந்தபட்சம் 20 நபர்களை பற் றிய தகவல்களை ஸ்விஸ் இந்தியா வுக்குத் தெரிவித்துள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x