Last Updated : 05 Nov, 2016 02:14 PM

 

Published : 05 Nov 2016 02:14 PM
Last Updated : 05 Nov 2016 02:14 PM

வங்கிகள் கடன்களை மீட்க வேண்டும்: அருண் ஜேட்லி

வங்கிகள் கடன்களை மீட்டு தனியார்த்துறை முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

தனியார்த்துறை முதலீடு செய்ய வங்கிக் கடன் அவசியம், ஆனால் அதற்கு ஏற்கெனவே கொடுத்த கடன்களை மீட்பது அவசியம் எனவே வங்கிகள் கடன்களை மீட்டால் அது தனியார்த்துறை முதலீடுகளுக்கு வழிவகுக்கும் என்கிறார் அருண் ஜேட்லி.

கடன் மீட்பு குறித்த கருத்தரங்கு ஒன்றில் இன்று (சனிக்கிழமை) பேசிய அவர், ''உள்நாட்டு முதலீடுகளே நாட்டின் பொருளாதாரத்தை தன்னிறைவாக்கும். ஆனால் அதில் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதே போல தனியார் முதலீடுகளை உயர்த்த, வங்கிகள் கடன்களைத் திரும்பப் பெற வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளில் பொது முதலீடுகள் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்திருக்கின்றன. எண்ணெய் விலை குறைந்தது, நம்முடைய சேமிப்பை அதிகப்படுத்த உதவியது.

அடுத்தபடியாக அந்நிய நேரடி முதலீடுகள். அவை நம்முடைய பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. வெளிநாட்டவர் முதலீடு செய்ய இந்தியா விரும்பத்தக்க நாடாகத் திகழ்கிறது. அதே நேரம் அந்நிய நேரடி முதலீட்டிலும் சில சவால்கள் இருக்கின்றன. இந்திய தனியார் துறை, முதலீடுகளை அதிகப்படுத்த வேண்டும். வங்கிகள், அவர்களுக்குக் கடன் அளிக்கத் தயாராகும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

வங்கிகளிலிருந்து கடன் பெற்றவர்கள் அதனை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்வது ஆயிரக்கணக்கான மற்றவர்கள் உபயோகமான வழியில் பயன்படுத்துவதைத் தடுக்கும்.

அதனால் கடனை மீட்கும் வழிமுறைகளை வங்கிகள் கடுமையாகப் பின்பற்ற வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x