Last Updated : 19 Oct, 2016 08:12 AM

 

Published : 19 Oct 2016 08:12 AM
Last Updated : 19 Oct 2016 08:12 AM

ரிலையன்ஸ் ஜியோ சூதாட்டமல்ல: முகேஷ் அம்பானி தகவல்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவன செயல்பாடுகள் மிகவும் திட்டமிட்ட தொழில். சிறந்த நோக்கத்துக்காக உயர் தொழில்நுட்பத் தரத்தில் அளிக்கப்படும் தொழில் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி குறிப்பிட்டார்.

இதில் எந்த சூதாட்டமும் இல்லை, சிறந்த நோக்கத்தை வெளிப்படுத்துகிறோம், சிறப்பான ஒன்றை செய்துள்ளோம், சூழலுக்குத் தேவையான கட்டமைப்பை உருவாக்கியுள் ளோம். இதற்காக ரூ. 2.5 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளோம் என்று செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற அம்பானி கூறினார்.

தொலைத் தொடர்பு ஒழுங் குறை ஆணையம் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங் களால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்த கேள்விக்கு ஆமாம் பிரச்சினைகள் இருந்தது. நன்றாக பயிலும் மாணவருக்கு மிகச் சிறந்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைத் துவிடும். ஆனால் ஹாஸ்டலில் அவர் நல்ல தகுதியில் இருப் பதனால்கூட ராகிங் செய்யப்பட கூடும் என்று கூறினார்.

சூழலுக்குத் தேவையானதாக இருக்க வேண்டும் அதுதான் முக்கியம். அரசின் திட்டமும் இதுதான். ரிலையன்ஸ் நிறுவனம் சிக்கல்களை சந்தித்தது. ஆனால் நீண்ட கால நோக்கில் எந்த சிக்கலும் இருக்காது. நீங்க பலசாலியாக இருந்தால் எடுத்துக் கொள்ளுங் கள். ஆனால் வாடிக்கையாளர்கள் எந்த வகையிலும் பாதிக்கப் படக்கூடாது. இதைத்தான் ஆர்-ஜியோ நடத்திக் காட்டுகிறது என்று கூறினார்.

ஆர் ஜியோ அறிமுகத்துக்கான காலதாமதம் குறித்து பேசிய போது; முதலில் இந்த புதிய முயற்சிக்காக 1.5 லட்சம் கோடி ரூபாயை குழுமம் முதலீடு செய்தது. ஆனால் தற்போது இந்த முதலீட்டை ரூ.2.5 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளோம் இதன் மூலம் 4 ஜி நெட்வொர்க் சேவை மிக விரைவாக கிடைக்கும் என்றார்.

ரிலையன்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர் சார்ந்த நிறுவனம், படிப்படியாக டிஜிட்டல் சேவையை அதிகரிக்கிறோம். மீடியா மற்றும் எண்டெர்டயின்மெண்ட் மற்றும் சில்லரை வர்த்தகம் என ஈடுபடுகிறோம். அடுத்த சில ஆண்டுகளில் மின் உற்பத்தியில் மிகப் பெரிய நிறுவனமாகவும் ரிலையன்ஸ் இருக்கும் என்று குறிப்பிட்டார்.

நாட்டின் டிஜிட்டல் புரட்சிக் காக செயல்படும் வாய்ப்பை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உருவாக்கியுள்ளது. அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங் களும் ஒன்றாக இந்த டிஜிட்டல் புரட்சியில் இணைய வேண்டும் என்றும் முகேஷ் அம்பானி குறிப்பிடார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x