Published : 04 Oct 2016 10:58 AM
Last Updated : 04 Oct 2016 10:58 AM

இவரைத் தெரியுமா?- மயங் சிங்கால்

பிஐ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார். நிறுவனத்தின் தலைவர் சலீல் சிங்காலின் மகன்.

1996-ல் இந்த நிறுவனத்தில் சேர்ந்தார் 2004-ம் ஆண்டு இணை நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றார்.

பிஐ லைப் சயின்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பில் பைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட், டிஎல்எப் பிராண்ட்ஸ், டிபி பில்ட் டெக் உள்ளிட்ட நிறுவனங்களில் இயக்குநராகவும் உள்ளார்.

நிறுவனத்தின் சமூக பொறுப்பு குழு மற்றும் பங்குதாரர்கள் நல்லுறவுக் குழு உள்ளிட்டவற்றிலும் முக்கிய பொறுப்பு வகிக்கிறார்.

இங்கிலாந்தில் பொறியியல் மற்றும் மேலாண்மை கல்வி கற்றவர். ரசாயனத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்டவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x