Published : 10 Aug 2022 08:50 PM
Last Updated : 10 Aug 2022 08:50 PM

'காம்பஸ்' எஸ்.யூ.வி-யின் 5ம் ஆண்டு கொண்டாட்டம்: புதிய எடிஷனை அறிமுகம் செய்த ஜீப் நிறுவனம் | விலை & அம்சங்கள்

சென்னை: ஜீப் நிறுவனத்தின் 'காம்பஸ்' எஸ்.யூ.வி வாகனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட 5-ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு புதிய பதிப்பை (எடிஷன்) அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களில் இந்த எஸ்.யூ.வி அறிமுகமாகி உள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

அமெரிக்க நாட்டை தலைமையிடமாக கொண்டு கடந்த 1977 முதல் கார்களை உருவாக்கி, விற்பனை செய்து வருகிறது ஜீப். இப்போது நெதர்லாந்தை சேர்ந்த பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனமான ஸ்டெல்லானிட்டிஸ் (Stellantis) வசம் இதன் உரிமை உள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவிலும் கார்களை விற்பனை செய்து வருகிறது.

அந்த வகையில் ‘காம்பஸ்’ எஸ்.யூ.வி காரின் ஐந்தாவது எடிஷனை இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஜீப். இதற்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் தொடங்கி உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • மூன்று விதமான வேரியண்ட்டுகளில் புதிய காம்பஸ் எஸ்.யூ.வி அறிமுகமாகி உள்ளது.
  • அது டீசல் 6-ஸ்பீடு மேனுவல் - ரூ 24.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), DCT உடன் பெட்ரோல்- ரூ 25.24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் 9 AT (4x4) கொண்ட டீசல் - ரூ. 28.24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
  • இந்த பதிப்பில் லுக், உட்புறத்தில் உள்ள கேபின் மற்றும் சீட்டுகள் புதிய பொலிவை பெற்றுள்ளன.
  • தானியங்கு முறையில் டிம் ஆகும் IRVM அம்சம் இதில் உள்ளது. இது காரை ஓட்டும் ஓட்டுநர்களின் கண்களுக்கு அதிக சிரமத்தை கொடுக்காது.
  • ப்ரீமியம் காம்பேக்ட் ரக கார்களில் ஜீப் முன்னணியில் இருப்பதாக ஜீப் இந்தியாவின் தலைவர் மகாஜன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x