Published : 10 Aug 2022 07:12 PM
Last Updated : 10 Aug 2022 07:12 PM

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம்

இந்தியாவின் 49-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி உதய் உமேஷ் லலித்

புதுடெல்லி: நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற நீதிபதி உதய் உமேஷ் லலித் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அரசியல் சட்டப்பிரிவு 124(2)-ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, உச்ச நீதிமன்ற நீதிபதி உதய் உமேஷ் லலித் (யு.யு.லலித்), இந்தியாவின் 49-வது தலைமை நீதிபதியாக வரும் 27 அன்று பொறுப்பேற்க உள்ளார்.

நீதிபதி யு.யு.லலித், கடந்த 2014 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், வழக்கறிஞரிலிருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்தியாவின் 13-வது தலைமை நீதிபதியாக 1971 ஆம் ஆண்டு பணியாற்றிய நீதிபதி எஸ் எம் சிக்ரி-க்கு பின்னர் வழக்கறிஞராய் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட நீதிபதி இவராவார்.

யு.யு.லலித் உச்ச நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணையத்தின் உறுப்பினராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார்.

முன்னதாக, தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பதவி காலம் ஆக. 26-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

தற்போது 65 வயதாகும் யு.யு.லலித் அவரது பணிநிறைவு காலமான நவம்பர் 8-ம் தேதி வரை, 70 நாட்கள் தலைமை நீதிபதியாக செயல்படுவார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x