Published : 03 Oct 2016 10:22 AM
Last Updated : 03 Oct 2016 10:22 AM

டாடா குழுமத்தின் எந்த நிறுவனத்தையும் அவசரப்பட்டு விற்கவில்லை: குழுமத் தலைவர் சைரஸ் மிஸ்திரி விளக்கம்

டாடா குழுமம் கடந்த 20 வருடங்களில் 40 தொழில்களில் இருந்து வெளியேறி இருக்கிறது. ஆனால் இந்த வெளியேறும் முடிவு உடனடியாகவோ அல்லது குறுகிய கால நிதி ஆதாயத்துக்காகவோ எடுக்கப்படவில்லை. பல வகையான முயற்சிகளுக்கு பிறகு இறுதிக் கட்டமாகத்தான் நிறுவனங்கள் விற்கப்படுகின்றன என டாடா குழுமத்தின் தலைவர் சைரஸ் மிஸ்திரி விளக்கம் கொடுத்துள்ளார்.

நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் இதுதொடர்பாக மிஸ்திரி மேலும் கூறியதாவது: நிறுவனங்களை விற்றது குறித்துப் பேசுவதில் எனக்கு தயக்கம் கிடையாது. அதிக நேரம் கூடி விவாதித்து, அனைத்து விதமான வாய்ப்புகளையும் பரிசீலனை செய்து, இயக்குநர் குழுவில் விவாதித்து, அதன் பிறகு அனைத்து பங்குதாரர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில்தான் நிறுவனங்களை விற்பது குறித்த முடிவை நாங்கள் எடுக்கிறோம்.

தொழிலில் எப்போதும் தோல்விகள் இருக்கும். தொழில் முனைவோரின் வாழ்க்கையில் ஒரு பகுதிதான் தோல்வி என்பதை நாங்கள் எதிர்பார்த்தே இருக்கிறோம். ஆனால் போதுமான அவகாசம் கொடுத்த பிறகே இந்த முடிவை எடுக்கிறோம்.

டாடா குழுமத்தின் ஜூவல்லரி நிறுவனமான தனிஷ்க் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் ஆகியவற்றை மீண்டு வந்த நிறுவனங்களுக்கு உதாரணமாகச் சொல்லலாம்.

நீண்ட காலத்துக்கு நீடித்த லாப வளர்ச்சி என்பதுதான் டாடா குழுமத்தின் முக்கியக் கொள்கை யாகும். நீண்ட காலம் எனும்போது குறுகிய மற்றும் நடுத்தர காலத் தைப் பற்றி கவலைப்பட மாட்டார் கள் என எளிதாகக் குற்றம் சாட்ட முடியும். ஆனால் டாடா குழுமம் பங்குச்சந்தையில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த மூன்று வருட காலத்தில் ஆண் டுக்கு 30 சதவீத வளர்ச்சியும், ஒவ் வொரு வருடமும் 900 கோடி டாலரும் முதலீடு செய்து வருகிறோம்.

குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சி என்பது அதிக அபாயம் நிறைந்தது என்பதை டாடா குழுமம் புரிந்துகொண்டிருக்கிறது. குறுகிய காலம் இலக்காக இருக்கும்பட்சத் தில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்யாமல் போவதற்கான வாய்ப் புகள் இருக்கின்றன. அதனால் நிறுவனங்கள் நீண்ட காலத்துக்குத் திட்டமிடுவது அவசியம். நிறுவனத்தின் அனைத்துத் துறைகளும் நீண்ட கால இலக்கை நோக்கிச் செயல்பட வேண்டும்.

டாடா குழுமத்தில் நீண்ட காலத்துக்காகத் திட்டமிடுகிறோம். அதுகுறித்து விவாதிக்கிறோம் அதற்காக முதலீடு செய்கிறோம்.

இவ்வாறு மிஸ்திரி குறிப்பிட்டார்.

ரத்தன் டாடா ஓய்வு பெற்ற பிறகு டாடா குழுமத்தின் தலைவராக கடந்த 2012-ம் ஆண்டு சைரஸ் மிஸ்திரி நியமனம் செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x