Last Updated : 20 Oct, 2016 10:45 AM

 

Published : 20 Oct 2016 10:45 AM
Last Updated : 20 Oct 2016 10:45 AM

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விதிகளை மீறியதால் ரூ.10.80 கோடி அபராதம்

செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு அளவு கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ரூ.10.80 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.

கடந்த ஜுலை 31-ம் தேதி அன்று மத்திய தொலைத்தொடர்பு துறையினர் 3.19 லட்சம் தொலைக் கோபுர நிலையங்களை சோதனை யிட்டனர். இதில் 205 தொலைக் கோபுர நிலையங்களில் கதிரியக்க விதிகள் மீறப்பட்டுள்ளதாக கண் டறியப்பட்டது. இந்த தொலைக் கோபுரங்களுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனங் களுக்கு ரூ.10.80 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச விதிகளை ஒப்பிடும் போது இந்தியாவில் கதிரியக்க விதிகள் 90 சதவீதம் கடுமையாக இருப்பதாக மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா கூறியதாக கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் கடந்த 25-30 ஆண்டுகளில் உலக சுகாதார மையத்தால் 25,000-க்கும் மேலான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த கதிர்வீச்சுகள் மனித உடல் நலத்துக்கு தீங்கானது என இதுவரை எந்த ஆய்வும் தெரிவிக்கவில்லை என்று அமைச்சர் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

”பல்வேறு ஆய்வுகள் மொபைல் கோபுரங்களிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுகள் உடல் நலத்திற்கு தீங்கற்றவை என்று கூறுகின்றன. ஆனால் இதில் உள்ள மிகப் பெரிய முரண்பாடு என்ன வென்றால் இந்த ஆய்வுகளுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களே நிதி வழங்குகின்றன. சர்வதேச அளவில் உள்ளவற்றை காட்டிலும் இந்தியாவில் உள்ள செல்போன் கோபுரங்களிலிருந்து 8 மடங்கு அதிகமாக கதிர்வீச்சுகள் வெளி யேறுவதாக நாட்டின் மிகப் பெரிய அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது” என்று கூட்டத் தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப் பினர் ரபிந்திர குமார் ஜேனா தெரி வித்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜேனாவால் எழுப்பப்பட்ட விஷயங்களை கவனிப்பதாக மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச் சர் சின்ஹா தெரிவித்தார்.

``தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் கூட் டாக இணைந்து முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். தனியார் நிறு வனங்கள் வைத்துள்ள செல்போன் கோபுரங்கள் அருகிலேயேதான் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய பொதுத் துறை நிறுவனங் களின் செல்போன் கோபுரங்கள் உள்ளன. ஆனால் தனியார் நிறுவனத்தின் சிக்னல் வீட்டின் உள்ளே இருக்கும் கழிப்பிடம் வரை கிடைக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களின் சிக்னல் வீட்டின் வாசல் வரையே கிடைக்கிறது. பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்கள் கடுமையான விதிகளை பின்பற்றுகின்றன. ஆனால் தனியார் நிறுவனங்களின் கதிர்வீச்சுகளின் அளவு மிக அதிகமாக இருக்கிறது’’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாவந்த் குற்றம் சாட்டியதாக மற்றொரு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் தனியார் நிறுவனங் களுடன் இணைந்து கூட்டுச்சதி யில் அதிகாரிகள் ஈடுபடுவது கண்டு பிடிக்கப்பட்டால் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சின்ஹா தெரிவித்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x