Published : 29 Sep 2016 10:39 AM
Last Updated : 29 Sep 2016 10:39 AM

இவரைத் தெரியுமா?- டேவிட் டைலர்

சர்வதேச நிறுவனமான பிராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2015-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருக்கிறார்.

இதற்கு முன் பிராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தின் அழகு பொருட்கள் பிரிவின் சர்வதேச தலைவர் பொறுப்பில் இருந்தவர்.

1990-ம் ஆண்டு இந்த நிறுவனத்தில் மேலாளராக பணிக்குச் சேர்ந்தவர். நுகர்பொருட்கள் மற்றும் அழகு சாதன துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பணி அனுபவம் கொண்டவர்.

சீனா தொழில் பாதுகாப்பு குழுவின் துணைத்தலைவர் பொறுப்பிலும், அமெரிக்காவைச் சேர்ந்த பீடிங் அமெரிக்கா நிறுவனத்தில் இயக்குநர் குழு தலைவர் பொறுப்பிலும் பணியாற்றியவர்.

அமெரிக்கா- சீனா தொழில் குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் பி.எஸ் பட்டம் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x