Last Updated : 11 May, 2016 09:30 AM

 

Published : 11 May 2016 09:30 AM
Last Updated : 11 May 2016 09:30 AM

நிதிக் கொள்கை குழுவுக்கு 3 உறுப்பினர்கள்: நிதியமைச்சகம் பரிந்துரை

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுவுக்கு நிதியமைச்சகம் சுயேச் சையான 3 உறுப்பினர்களை பரிந்துரை செய்துள்ளது. இதனால் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை வகுக்கும் குழு விரையில் நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் வட்டி விகித திட்டமிடுதல் மற்றும் பணவீக்க இலக்குகளை தீர்மானிக்கும் அமைப்பான நிதிக் கொள்கை குழுவுக்கு (Monetary Policy Committee) சுயேச்சையான மூன்று உறுப்பினர்களை நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இது குறித்த தகவலை பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்தி காந்ததாஸ் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நிதிக் கொள்கைக் குழு சட்டத்தின்படி ரிசர்வ் வங்கி தனது உறுப்பினர்களை பரிந் துரை செய்துள்ளது. இதன்படி ரிசர்வ் வங்கி கவர்னர், துணை கவர்னர் மற்றும் செயல் இயக்குநர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். அரசு தரப்பிலிருந்து சுயேச்சையான எந்த பொறுப்புகளிலும் இல்லாத மூன்று நபர்களைப் பரிந்துரைக்க வேண்டும். அவர்களை தற்போது அரசு பரிந்துரை செய்துள்ளது.

நிதிக் கொள்கை குழுவுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ள உறுப்பினர்களை தேர்வு கமிட்டி தேர்வு செய்துள்ளது. இந்த குழுவில் அமைச்சரவை செயலர், ரிசர்வ் வங்கி கவர்னர், பொருளாதார விவகாரத்துறை செயலர் மற்றும் பொருளாதாரம் வங்கி, நிதி மற்றும் நிதிக் கொள்கை சார்ந்த மூன்று நிபுணர்கள் அடங்கிய குழு உறுப்பினர்களாக இருந்து தேர்வு செய்துள்ளனர்.

இந்த குழு உறுப்பினர்களின் பதவி காலம் நான்கு ஆண்டுகள். தகுதியாக இல்லாதபட்சத்தில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் நியமனம் செய்யப்பட மாட்டார்கள். இந்த குழு ஆண்டுக்கு நான்குமுறை கூடும். தேவைக் கேற்ப அவசியமென்றால் அரசுக்கு தங்களது ஆலோசனைகளை ஒவ்வொரு முறையும் வழங்கும் அமைப்பாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x