Published : 19 May 2016 08:48 AM
Last Updated : 19 May 2016 08:48 AM

இவரைத் தெரியுமா?- பி ஸ்ரீநிவாஸ்

கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்தப் பதவியில் இருந்து வருகிறார்.

2012-ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை பாங்க் ஆப் பரோடாவின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

இந்தோ ஜாம்பியா வங்கியின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

ஆந்திர வங்கியில் 1978ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்தவர். இந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

விசாகப்பட்டினம்பொறியியல் கல்லூரியில் இளநிலை பட்டமும், இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் மனிதவள மேம்பாட்டுப் பிரிவில் முதுநிலை பட்டமும் பெற்றவர்.

இந்தியாபர்ஸ்ட் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் மற்றும் நேஷனல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x