Published : 26 Mar 2022 07:42 AM
Last Updated : 26 Mar 2022 07:42 AM

ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டு வந்த சூப்பர் டெக் நிறுவனம் திவால்: வீடு வாங்கிய 25 ஆயிரம் பேர் பாதிப்பு

புதுடெல்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான சூப்பர்டெக் நிறுவனம் திவாலானதாக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்சிஎல்டி) அறிவித்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தில் வீடுவாங்குவதற்காக பணம் செலுத்திய25 ஆயிரத்தும் மேற்பட்டோர் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேசமயம் என்சிஎல்டி அறிவிப்பை எதிர்த்து மேல் முறையீடுசெய்யப் போவதாக சூப்பர்டெக்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி நடத்த இயலாமல் போகும் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து அது திவாலாகி விட்டதா என்பதை பரிசீலிக்கும் பணியை என்சிஎல்டி மேற்கொள்கிறது. இந்திய திவால் சட்ட மசோதா அடிப்படையில் (ஐபிசி) அதற்குரியவரையறையை பூர்த்தி செய்யும் நிறுவனங்கள் திவாலானதாக அறிவிக்கப்படும். இவ்விதம் அறிவிக்கப்பட்டாலும் மேல் முறையீடு செய்ய முடியும்.

நொய்டாவில் கட்டிய இரட்டை கோபுர குடியிருப்பை மே மாதம் இடிக்கப் போவதாக இந்நிறுவனம் தெரிவித்திருந்தது. இடிக்கும் பணியை திட்டமிடும் எடிபிஸ் இன்ஜினீயரிங் நிறுவனம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது. இடித்து தரைமட்டமாகும் பணி 9 விநாடிகளில் முடிந்துவிடும். அருகில் உள்ள கட்டிடங்களுக்கு சேதம் இல்லாமல் இடிக்கும் பணியை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ள தாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

100 மீட்டர் மற்றும் 97 மீட்டர் உயரம் கொண்ட இரட்டை கோபுரத்தை இடிக்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்தது.

கட்டிடம் தகர்க்கப்பட்ட பிறகுஅதன் பாதிப்பு குறித்து நொய்டாஆணைய அதிகாரிகள் ஆய்வுசெய்வர் என தெரிவிக்கப்பட் டுள்ளது. என்சிஎல்டி உத்தரவு தங்களது பிற திட்டப் பணிகளை பாதிக்காது என்றும் பிற கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெறும். அதில் பதிவு செய்துள்ள வாடிக் கையாளர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் 40 ஆயிரம் பேருக்கு வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் மேலும் தெரிவித்துள் ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 7 ஆயிரம் குடியிருப்புகளை கட்ட இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருவதாக நிறுவனம் தெரி வித்துள்ளது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x