Published : 09 Mar 2022 08:17 AM
Last Updated : 09 Mar 2022 08:17 AM
புதுடெல்லி: உடனடி பணப் பரிமாற்ற சேவையை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. யுபிஐ123 பே என்ற பெயரிலான இந்த சேவையை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தொடங்கிவைத்தார்.
ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை தளமான யுபிஐ மூலம் இப்புதிய சேவையை மக்கள் பயன்படுத்தலாம். இந்தியாவில் மிகவும் நம்பகமான தளமாக செயல்படும் இதன்சேவையை மேலும் பாதுகாப்பான வழியில் பயன்படுத்த புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது யுபிஐ சேவையை பயன்படுத்துவோர் கூடுதல் இணைப்பு வசதியுடன் மட்டுமே பயன்படுத்த முடிந்தது. இனிபோன் மூலமும் இந்த சேவையைபயன்படுத்தலாம். இதை செயல்படுத்துவதற்கு ஐவிஆர் அழைப்பு மூலமான உதவியையும் பெறலாம். செயலி அடிப்படையிலான வசதி உள்ளிட்ட பல வசதிகளை இது உள்ளடக்கியது. நண்பர்கள், உறவினர்களுக்கு பணப் பரிவர்த்தனை, மின் கட்டணம், சொத்து வரி செலுத்துவது, காருக்கான பாஸ்டாக் ரீசார்ஜ் உள்ளிட்ட சேவைகளையும் இதன் மூலம் மேற்கொள்ளலாம் என ஆர்பிஐ வெளியிட்ட செய்தியில் கூறப்பட் டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT