Published : 21 Dec 2021 03:41 PM
Last Updated : 21 Dec 2021 03:41 PM

பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் மத்திய அரசு, தமிழக அரசுகளுக்கு கிடைத்த வரி வருவாய் எவ்வளவு?

புதுடெல்லி: 2020-21 நிதியாண்டில் பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு வரி மற்றும் மேல் வரியாக ரூ. 4,55,069 கோடி வசூல் செய்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி, மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையிலிருந்து மத்திய அரசுக்கு கிடைத்த வரி வருவாய், மாநில அரசுகள் வசூலித்த விற்பனை வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி விவரங்களை தெரிவித்தார்.

அதன்படி, 2020-21-ம் நிதியாண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மூலம் மத்திய அரசு வரியாக வசூலித்த தொகை ரூ.4,55,069 கோடி. விற்பனை மற்றும் மதிப்பு கூட்டு வரியாக தமிழகம் கடந்த 2020-21ம் ஆண்டில் ரூ.17,063 கோடியும், புதுச்சேரி ரூ.10 கோடியும் வசூலித்துள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மூலம் மத்திய அரசு வரியாக வசூலித்த தொகை விவரம்:

2016-17: ரூ.3,35,175 கோடி
2017-18: ரூ.3,36,163 கோடி
2018-19: ரூ.3,48,041 கோடி
2019-20: ரூ.3,34,315 கோடி
2020-21: ரூ.4,55,069 கோடி

விற்பனை மற்றும் மதிப்பு கூட்டு வரியாக கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் வசூலித்த தொகை விவரம்:

2016-17: ரூ.12,563
2017-18: ரூ.15,507
2018-19: ரூ.18,143
2019-20: ரூ.18,175
2020-21: ரூ.17,063

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x