Published : 16 Mar 2016 09:44 AM
Last Updated : 16 Mar 2016 09:44 AM

ஏர் இந்தியா ரூ.8 கோடி செயல்பாட்டு லாபம் ஈட்டும்: அமைச்சர் மகேஷ் ஷர்மா தகவல்

நடப்பு நிதி ஆண்டில் ஏர் இந்தியா 8 கோடி ரூபாய் செயல்பாட்டு லாபம் ஈட்டும் என்று விமான போக்குவரத்து துறை இணை யமைச்சர் மகேஷ் ஷர்மா மாநிலங்களவையில் தெரிவித் தார். ஏர் இந்தியா நிறுவனமும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவன மும் இணைந்த பிறகு முதல் முதலாக செயல்பாட்டு லாபம் ஈட்டுகிறது இந்த நிறுவனம்.

கடந்த நிதி ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனம் 2,636 கோடி ரூபாய் அளவுக்கு செயல்பாட்டு நஷ்டம் அடைந்தது. நடப்பு நிதி ஆண்டில் 8 கோடி ரூபாய் செயல்பாட்டு லாபமடைய வாய்ப்பு இருக்கிறது. 2007-08-ம் நிதி ஆண்டில் இரு விமான நிறுவனங்களும் இணைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக செயல்பாட்டு லாபம் ஈட்டுகிறது என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த 2012-ம் ஆண்டில் ஏர் இந்தியா தொடர்ந்து செயல்பட மத்திய அரசு 30,231 கோடி ரூபாயை முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x