Published : 19 Mar 2016 10:10 AM
Last Updated : 19 Mar 2016 10:10 AM

நிறுவனங்களின் வாராக் கடனை வசூலிக்க தொழிலதிபர்களின் சொத்துகளை முடக்கலாம்: வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்

பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாத நிறுவனங்களுக்கு சொந்த ஜாமீன் அளித்த தொழிலதிபர்களிடமிருந்து கடனை வசூலிக்க வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

நிறுவனம் நஷ்டத்தில் செயல் பட்டு மூடப்பட்டிருந்தால், அந்நிறு வனங்களின் உரிமையாளர்கள் வழங்கிய சொந்த ஜாமீன் அடிப் படையில் கடனை அவர்களிட மிருந்து வசூலிக்குமாறு நிதி அமைச்சகம் அனைத்து பொதுத் துறை வங்கிகளுக்கு நேற்று அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லை யாவுக்கு எதிராக தொடரப்படும் வழக்குகள் மற்றும் சொத்துகளை முடக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து இதே போன்ற நடவடிக் கைகளை பிற தொழில் நிறுவ னங்களின் தொழிலதிபர்களிடமும் மேற்கொள்ள வங்கிகளுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக் கையை ரிசர்வ் வங்கியுடன் ஆலோச னை நடத்தி அனுப்பியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொதுவாக சொந்த ஜாமீன் அளித்த தொழிலதிபர்களிடமிருந்து கடனை மீட்கும் நடவடிக்கையை கடைசிபட்சமாகத்தான் வங்கிகள் மேற்கொள்ளும். கிங்பிஷர் ஏர்லைன்ஸுக்கு கடன் அளித்த விஷயத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு சென்று விட்ட நிலையில் அவரிடமிருந்து வசூலிக்க பல்வேறு கட்ட நடவடிக் கைகள் எடுக்க வேண்டியுள்ளது. அதனால் இதுபோன்ற நிலை பிற வாராக்கடனை செலுத்தாத நிறுவனங்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக நிதி அமைச்சகம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளதாக நிதி அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடன் வசூலிக்கும் நடவடிக் கையில் சொந்த ஜாமீன் அளித்த வர்கள் மீதான நடவடிக்கை மிகச் சிலவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்விதம் ஜாமீன் அளித்தவர் களின் சொத்துகளை முடக்கும் நடவடிக்கை மிகக் குறைவான எண்ணிக்கையில் நடைபெற்றுள்ளன.

பொதுவாக நிறுவனங்களுக்கு கடன் வழங்கும்போது தனி நபர் பிணை அல்லது ஜாமீன் கேட்பது வங்கிகளின் வழக்கமான நடைமுறை. இத்தகைய ஜாமீனை நிறுவனர்களிடமோ அல்லது இயக்குநர்களிடமிருந்தோ அதாவது நிறுவனத்தில் அதிகபட்ச பங்குகளை உள்ளவரிடத்திலிருந்து பெறப்படும். இது தவிர தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் உத்தரவாதமும் பெறப்படும்.

நிறுவனங்கள் நலிவடைந்து மூடப்படும்போது அந்த நிறுவனத் துக்குக் கடன் வழங்குவதற்கு உத்தரவாத கையெழுத்திட்ட அனை வருக்குமே அந்த கடனை செலுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. கடன் பெற்றவர் மற்றும் ஜாமீன் உத்தரவாத கையெழுத் திட்டவர்களுக்கும் கடனை செலுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனங்களை நடத்த முடியாது என தெரிந்தால், வாராக் கடன் வசூலிக்க முடியாது என தெரிந்தால் உடனே நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு நிதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

இவ்விதம் உத்தரவாதம் அளித்துள்ளவர்கள் அதற்கு ஈடாக அளித்துள்ள சொத்துகளை சர்பாசி சட்டம் 2002-ன் படி பிரிவு 13-ன் கீழ் நடவடிக்கை எடுக்கமுடியும் என்றும், உத்தரவாத கையெழுத்திட்டவர்கள் அதற்கு ஈடாக நிறுவன பங்குகளைக் காட்டியிருந்தால் அவற்றை விற்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடன் மீட்பு தீர்ப்பாயத்துக்கு செல்லும் முன் உத்தரவாதம் அளித்த நபரின் சொத்துகளை முடக்கி அவற்றை விற்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வங்கிகள் தொடர்ந்து நிறுவனங்களின் கடன் நிலுவை குறித்து குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்து அவற்றை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நிதி அமைச்சக அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x