Published : 15 Mar 2016 10:49 AM
Last Updated : 15 Mar 2016 10:49 AM

இவரைத் தெரியுமா- விக்ரம் கிர்லோஸ்கர்

கிர்லோஸ்கர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார்.

டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார் இந்தியா மற்றும் டொயோடா கிர்லோஸ்கர் ஆட்டோ பார்ட்ஸ் நிறுவனங்களின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

ஆட்டோ மொபைல் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்டவர். இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

விஎஸ்கே ஹோல்டிங்க்ஸ், தக்ஸ்சிலா ஹாஸ்பிட்டல்ஸ் மற்றும் கிர்லோஸ்கர் குழும பல்வேறு நிறுவனங்களின் இயக்குநர் குழு மற்றும் சில நிறுவனங்களில் பொறுப்புகளில் இல்லாத இயக்குநராகவும் உள்ளார்.

ஒன்மொபைல் குளோபல் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்தவர்.

இந்திய தொழிலகக் கூட்டமைப்பில் தேசிய கவுன்சில் உறுப்பினர். கர்நாடக மாநில தொழில் வளர்ச்சிக்கு உதவியதாக கர்நாடக அரசு இவருக்கு விருது வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x