Last Updated : 23 Mar, 2016 09:49 AM

 

Published : 23 Mar 2016 09:49 AM
Last Updated : 23 Mar 2016 09:49 AM

வால்மார்ட்டை விஞ்சும் அலிபாபா

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான சீனாவின் அலிபாபா நிறுவனம் உலகின் மிகப் பெரிய சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் நிறுவனத்தை விற்பனையில் முந்த உள்ளது. நடப்பு நிதி ஆண்டுக்குள் வால்மார்ட்டை விட விற்பனையில் முன்னிலையில் இருப்போம் என எதிர்பார்ப்பதாக நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டு இறுதிக்குள் நிறுவனத்தின் விற்பனை 46,300 கோடி டாலர்களாக இருக்கும் என்று கூறியுள்ளது. வால்மார்ட் நிறுவனம் 47,800 கோடி டாலர்கள் என நடப்பாண்டு நிகர விற்பனையாக ஜனவரி 31 அன்று அறிவித்தது.

அலிபாபா நிறுவனத்தின் தற்போதைய நிகர விற்பனை மதிப்பு 463.3 பில்லியன் டாலர்களாக உள்ளது. எனவே நடப்பு ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் வால்மார்ட் நிறுவனத்தின் நிகர விற்பனை மதிப்பைவிட அலிபாபா விற்பனை மதிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது.

அலிபாபா நிறுவனத்தின் நிகர விற்பனை மதிப்பு கடந்த ஆண்டே சீனாவின் சீசூவான் மாகாண ஜிடிபி மதிப்புக்கு நிகராக இருந்தது என்று சீன நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மாகாணம் சீன ஜிடிபியில் ஆறாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விற்பனை நுகர்வோர் சந்தையில் மாபெரும் சாதனை என்று நிறுவனத்தின் சிஇஓ ஸாங் யங் குறிப்பிட்டார்.

நிறுவனத்தின் ஆண்டு நிகர விற்பனை மதிப்பு 2020 ஆம் ஆண்டுக்குள் ஆறு டிரில்லியன் யென் ( 980 பில்லியன் டாலர்) மதிப்புக்கு வளரும் என எதிர்பார்ப்பதாக கூறினார். 2024 ஆண்டுக்குள் 200 கோடி மக்கள் அலிபாபா மூலம் பொருட்கள் வாங்குவார்கள் என்றும், உலக அளவில் 1 கோடிக்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் அலிபாபா வழியாக பொருட்களை விற்கும் என்றும் கூறினார்.

நிறுவனம் இணையம் மற்றும் இணையதளம் சார்ந்து கிளவுட் கம்யூட்டிங் மற்றும் பிக் டேட்டா தொழில்நுட்ப முயற்சிகளில் இறங்க உள்ளது. 2009க்கு பிறகு பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத் துக்கு குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் இகாமர்ஸ் சந்தை யில் சீன நிறுவனம் அமெரிக்க நிறுவனத்தின் விற்பனையை முறியடிக்க உள்ளது. சீன 6.5 சதவீத ஜிடிபி இலக்கு வைத்துள் ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x